ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2008

நன்றி மறந்த நாடு

தாய்நாட்டு விடுதலைக்காக தன்னலம் பாராத தேசபக்தனாக தமிழ் கூறும் நல்லோரில் நம‌க்கு சட்டென நினைவுக்கு வருபவர்களில் வ.உ.சி, மருது, கட்டபொம்மன் குறிப்பிடத் தகுந்தவர்கள். அவர்கள் எந்த அளவிற்கு தாய்மண்ணை நேசித்தார்களோ அந்த அளவிற்கு நாடு அவர்களை நினைவு கொள்கிறதா என்பதற்கு வெட்கித்தலைகுனிய வேண்டிய நிலையில் தான் நம் விடை உள்ளதெனும் நிதர்சனமே நாம் கீழ்க்காணும் காட்சி.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான வ.உ.சிதம்பரம் ஏகாதிபத்திய எதிர்ப்பில் கப்பலோட்டியது மட்டுமில்லாமல் பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங் கோன்மையையும் எதிர்த்து மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வையில் ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டே விரட்டுகிற மாபெரும் சக்தியாகவே வ.உ.சி. தொழிலாளி வர்க்கத்தைப் பார்த்தார். போராட்டமே வாழ்க்கையாக தாய் நாட்டுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, தன்னிகரில்லாத தலைவனாக திருநெல்வேலி சீமையிலே வாழ்ந்த அந்த செக்கிழுத்த செம்மலுக்கு நாம் செய்த கைமாறு என்ன? வாழ்வதற்கு வழி இல்லாமல் நிராதராவாய் மதுரை மூன்றுமாவடி சாலையோரம் தங்கி வாழும் செக்கிழுத்த செம்மலின் கொள்ளுப்பேரனும் பேத்தியும்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இந்த அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவதிப்படும் தியாகத்தின் சந்ததிகள் தங்கள் அடையாளம் இழந்து ஒரு நடைபிணமாய் இருப்பதைக்கண்டு கல் நெஞ்சும் உருகும். ஆனால் ஆட்சியாளர்களும் அரசியல் வியாதிகளும் எதைப்ப‌ற்றி அக்கறை கொண்டார்கள். கவர்ச்சியான வார்த்தைகளால் மக்களுக்கு போதையூட்டி அவர்களை மழுங்கடித்ததைத் தவிர வேறு என்ன செய்தார்கள். அதிகார வெறியும் பதவி போதையும் அவர்களின் காதை செவிடாக்கி கண்ணை குருடாக்கி விட்டது. உற்றார் உறவினரும், கட்டிய சொந்தங்களும் கைவிட்ட நிலையினிலே கடைசியில் ஒட்டியிருந்த துளி நம்பிக்கைக்காக அரசை நாடி நடையாய் நடந்து வெறுத்து இதுதான் தலைவிதி என்ற நிற்கதிக்கு தள்ளப்பட்டனர்.

மறுகாலனி ஆதிக்கத்தை தலைமேல் தாங்கிகொண்டிருக்கும் தரம் தாழ்ந்த அரசானது ஏகாதிபத்திய அடிவருடிகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும் சாதகமாக மட்டுமே சட்டம் இயற்றவும், மூளையை கசக்கி வேலை செய்யவும் முனைகிறது. உண்மையான தியாகிகளுக்கு என்ன செய்ததென பார்த்தால் ஒன்றும் இல்லை. அரசியல் லாபத்திற்காக, வியாபார நோக்கத்திற்காக மட்டுமே அதிகபட்சமாய் சிலை வடிப்பதும் அஞ்சல் தலை வெளியிடுவதோடும் தன் கடனை முடித்துக்கொள்கிறது. மறுபடியும் மறுபடியும் இதையே பெருமை பேசுகிறது.

வரலாறுகளை இருட்டடிப்பு செய்து தியாகத்தின் வாரிசுகளை உதாசினப்படுத்தி நன்றி மறந்த நாடாய் இருப்பதினாலேயே ம‌னிதம் மறந்த இயந்திர மனிதன் உணர்வும் மரத்து சுரனையற்று வாழ்வதால் மறுகாலணி ஆதிக்கமும், ஏகாதிபத்திய கொடுமையும், எதிர்காலச் சிந்தனையும் இல்லாமல் சுயநலமே உருவாய் அடிமை வாழ்வை நோக்கி அடிவைத்துச் செல்வ‌துட‌ன் தன் ம‌ண்ணுக்குறிய‌ மாண்பு அறியாமல் போர்க்குண‌மும் இல்லாம‌ல் ம‌க்கி ம‌ல‌டானான்.

அறிவியல் வளர்கிறது பொருளாதாரம் பெருகுகிறது என்றெல்லாம் பொய் வத‌ந்திகளை பரப்பிவரும் ஓட்டுப்பொறுக்கி அரசியலை இனியாவது உண‌ர்ந்தறிய வேண்டும் நண்பர்களே, இவர்கள் நன்மை செய்வார்கள் என்று இனியும் நம்பினால் நம்மைத்தவிர முட்டாள் உலகில் வேறு யாரும் இல்லை. முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் தான் இந்த அறிவு வள‌ர்ச்சியால், தொழிற்புரட்சியால் வளர்ச்சியடைந்துள்ளன. அவைகளுக்கு சாதகமான சூழலே இங்கு ஏற்படுத்தி கொடுத்திருப்பது இந்த அரசியல் என்பதை அறிய வேண்டும். கூட்டணி விபச்சாரத்தில் கைகோர்ப்பவர்கள் கொள்கையை சீட்டு அடிப்படையில் அடகு வைப்பவர்கள், கூட்டு உடைந்ததும் அவர்களுக்குள்ளே காறி உமிழ்ந்த காட்சியெல்லாம் நீங்கள் கண்ணெதிரே கண்டதுதான். மௌனம் வேண்டாம் நண்பர்களே.... மரணித்துக்கொண்டிருப்பது நாம் மட்டுமல்ல, நாடும் தான்.

தியாகமறிந்த வாரிசுகளே மூன்று தலைமுறை இடைவெளியில் இந்நிலைக்கு ஆளானால் தியாகம் மறந்த நம் நிலை என்ன? சிந்தியுங்கள்.

7 கருத்துகள்:

Nithi... சொன்னது…

அறிவியல் வளர்கிறது பொருளாதாரம் பெருகுகிறது என்றெல்லாம் பொய் வத‌ந்திகளை பரப்பிவரும் ஓட்டுப்பொறுக்கி அரசியலை இனியாவது உண‌ர்ந்தறிய வேண்டும் நண்பர்களே, இவர்கள் நன்மை செய்வார்கள் என்று இனியும் நம்பினால் நம்மைத்தவிர முட்டாள் உலகில் வேறு யாரும் இல்லை. முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் தான் இந்த அறிவு வள‌ர்ச்சியால், தொழிற்புரட்சியால் வளர்ச்சியடைந்துள்ளன. அவைகளுக்கு சாதகமான சூழலே இங்கு ஏற்படுத்தி கொடுத்திருப்பது இந்த அரசியல் என்பதை அறிய வேண்டும். கூட்டணி விபச்சாரத்தில் கைகோர்ப்பவர்கள் கொள்கையை சீட்டு அடிப்படையில் அடகு வைப்பவர்கள், கூட்டு உடைந்ததும் அவர்களுக்குள்ளே காறி உமிழ்ந்த காட்சியெல்லாம் நீங்கள் கண்ணெதிரே கண்டதுதான். மௌனம் வேண்டாம் நண்பர்களே.... மரணித்துக்கொண்டிருப்பது நாம் மட்டுமல்ல, நாடும் தான்.

ARUMAI TANGAL BLOG
VALTHUKAL

ARUMAI NANBA
VALTHUKAL

Southscapes சொன்னது…

சிறப்பாக எழுதி இருக்கிறீகள் நண்பரே,

நட்புடன்,
நிலவன்.

http://eerththathil.blogspot.com

பெயரில்லா சொன்னது…

அருமை நண்பரே... விழிப்புணர்வு இணைய தளங்கள் மூலமாகவேனும் பரவட்டும்.

நகைச்சுவை-அரசர் சொன்னது…

முதலில், சமூகம் சார்ந்த தங்களது பொறுப்புணர்வுக்கு நன்றி.

செக்கிழுத்த செம்மலின் வாரிசுகள் குறித்த செய்தி, அதிர்ச்சியையும் வலியையும் தந்தது. நாட்டுக்காக தியாகம் செய்தோரின் வாரிசுகள் நடுத்தெருவில் நிற்கும் அவலம் அறிந்தால் யார் இனி நாட்டுக்கு உழைக்க முன்வருவார்கள்..?

தாமதமானாலும் அரசு உடனே முன்வந்து அந்த வாரிசுகளுக்கு தக்க முறையில் மரியாதை செலுத்தவேண்டும்.

வினவு சொன்னது…

தினமணியில் இந்த செய்தி வந்ததும் காங்கிரசுக் கும்பல் உட்பட பலர் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்ய முன்வந்தனர். இதன் மூலம் தியாகத்தை வணங்குவதாக்க் காட்டிக் கொள்வார்கள். உண்மையில் நாட்டை விற்றுக் கொண்டிருப்பவர்கள் இத்தகைய நாடகங்களை எப்போதும் அரங்கேற்றுவார்கள். தியாகிகளின் வாரிசுகளைக் குளிப்பாட்டுவதன் மூலம் தங்கள் துரோகத்தை மறைத்துக் கொள்ள முயல்வார்கள். இந்த முகமூடியைக் கிழிப்பதுதான் நமது கடமை!

பெயரில்லா சொன்னது…

vanakkam thozar