வெள்ளி, ஆகஸ்ட் 08, 2008

புவி வெப்பமாதலும், அதன் அரசியலும்...

புவி சூடேற்றம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கின்ற போதும், அதன் சரியான உண்மைப்புரிதல் பெரும்பாலானோருக்கு இல்லைதான். வித்தியாசம் என்கிற பெயரில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (ஏகாதிபத்திய அடிவருடிகள், கைகூலிகல்) பிரச்சார நிகழ்ச்சி நடத்துகிற‌து. புவி வெப்பமாதலைத்தடுக்க எக்ஸ்னோரா நிறுவனம்(NGO) "88888" என்ற விழிப்புணர்வு பிரச்சார‌ம் செய்கிறது. அதாவது 2008 ம் ஆண்டு, 8-வது மாதம், 8-ம் தேதி, 8-மணிக்கு, 8 நிமிடங்களைக் குறிக்கும். அதன்படி இன்று இரவு 8 மணியிலிருந்து 8 நிமிடங்களுக்கு மின்சார பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும்.

குறைந்த மின்னழுத்தமும், முன்னறிவிப்பின்றி வரும் (ஆர்க்காட்டாரும்) மின்தடையும் நம‌து அன்றாட வாழ்வை எந்த அளவிற்கு பாதிப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. வீடுகளும், சிறு தொழிலாளர்களும் சொல்லமுடியாத அளவிற்கு தின‌மும் அவதிப்படுகின்றனர். இதில் இந்த 8 நிமிட மின்பயன்பாடு தவிர்ப்பு எந்த அளவிற்கு புரிதலை தரப்போகிறது.

நமது நாட்டின் மொத்த எரிபொருள் தேவையும் அதன் பாதிப்பையும் விட அமெரிக்காவின் சில மாகாணங்களின் கூட்டுத்தேவையும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பும் உலகத்திற்கு மிகமிக அதிகம். மொத்த அமெரிக்காவையும் கணக்கெடுத்தால் இந்த பிரச்சனைக்கு மூல காரணம் யாரல் என்பது தெரியும். அங்கு போய் இந்த அறிவுஜீவிகள் பேசமுடியுமா? முடியாது. ஏனென்றால் இவர்கள் அங்கிருந்து கூலி வாங்கிக்கொண்டுதான் உலகத்தின் கையை கொள்ள அறிவுரை சொல்கிறார்கள். அமெரிக்கா போன்ற கனவான்கள் சொகுசாய் வாழ நம்மை சாகச்சொல்லி நேரடியாகவே பேச ஆரம்பித்து விட்ட மத்திய மாநில அரசைப்போலவே இவர்களும்.

அமெரிக்க ஏகாதிபத்திய திமிர் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் மிகமோசமான படுகொலையை நிகழ்த்தும் அதேவேளையில் "மனிதநேய உதவி" என்ற பெயரில், மனிதநேயமற்ற குண்டுவீச்சுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொட்டலம் வழங்கியது. அமெரிக்கப் பேச்சுக்கெல்லாம் "ஆமாம்" வேலை பார்க்கும் ஐ.நா சபையும் உதவும் அமைப்புகள் மூலம் நீர், உணவு, மருந்து போன்றவற்றை அனுப்புகிறது. பெரிய அணைகளைக்கட்டுவதன் மூலம் லட்சக்கணக்கான மக்களை, அவர்களின் வீடு நிலங்களிலிருந்து வெளியேற்றுகின்ற உலக வங்கி, இடம் பெயர்ந்த மக்களுக்கு நஷ்டஈடு பெறவும், வீடுகள் கட்டித்தரவும் போராடும் அமைப்பை உருவாக்குகிறது. திட்டங்கள் என்கிற பெயரில் காட்டுமரங்களை வீழ்த்துவதன் மூலம் சுற்றுசுழலைச் சீரழிக்கும் ஏகாதிபத்திய அமைப்புகள்தான் காடுகளைப் பராமரிக்க வேண்டுகின்ற தன்னார்வக் குழுக்களையும் உருவாக்குகிறார்கள். சுரண்டும் வர்க்கத்தின் த‌ந்திரமான இவற்றை நாம் ஆராய்ந்தோமானால் அவை ஒடுக்குமுறையையும் சீர்திருத்தப்பாதையையும் ஒரே நேரத்தில் கையாள்வதை நாம் காண முடியும். இதன் முக்கிய நோக்கம் ஒடுக்கப்பட்ட மக்களை அரசியலற்றவர்களாகவும் அணிதிரளாதவர்களாகவும் பாதுகாப்பதே ஆகும். ஏகாதிப‌த்திய‌வாதிக‌ள், போர‌ட்ட‌ம் ந‌ட‌த்தும் ம‌க்க‌ளிடையே அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளை உருவாக்குகிறார்க‌ள். ம‌க்க‌ளின் கோப‌த்தைத் த‌ணிக்கின்ற‌ "பாதுகாப்பு வால்வாக‌" அந்த‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் செய‌ல்ப‌ட‌வேண்டும் என்ப‌துதான் அவ‌ர்க‌ளின் நோக்க‌மாகும். உதார‌ண‌மாக‌, 1885-ம் ஆண்டு பிரிட்டிஷ் கால‌னிய‌வாதிக‌ளால் காங்கிர‌சுக் க‌ட்சி உருவாக்க‌ப்ப‌ட்ட‌து இவ்வாறுதான்.



எனவே இந்த அரசு சார அமைப்புகள்(NGO) ஒடுக்கப்பட்ட மக்களிடையே, முதலாளித்துவத்திற்கு மாற்று ஏதுமில்லை என்ற போலி நம்பிக்கையைப் புகுத்தவும், முதலாளித்துவம் இறுதி வெற்றியைப் பெற்றுவிட்டதாகவும், கம்யூனிசம் இறந்து விட்டதாகவும், மார்க்ஸியம் காலாவதியாகிவிட்டதாகவும் சித்தரிக்கவே அவை முய‌ல்கின்றன. இந்த NGO-க்கள் தம்மை லாப நோக்கமற்ற, தன்னலமற்ற சமூகப்பணியில் ஈடுபடும் அமைப்புகளாகவும் காட்டிக்கொண்டு ஒரு மாயையை உருவாக்கி ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு ஏற்ற பாதையை வகுத்துத் தருகின்றன. எனவே இந்த கைக்கூலி பச்சோந்திகளின் உண்மை நிலையினை உணர்ந்தரிவீர் நண்பர்களே....!


"யார் வீட்டு எழவோ, பாய் போட்டு அழுவு" ங்கிற மாதிரி மிகக்குறைந்தபட்ச மனிதத்தோடு நாட்டில் எல்லோருக்கும் ஒருவேளை உணவாவது கிடைத்ததா என்பதறியாத அறிவுஜீவி அரசியல்வா(வியா)திகள் ஆயுதம் வாங்கவும், அதனைத்தயாரிக்கவும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அதிக நிதி ஒதுக்கும் மானங்கெட்ட அரசுக்கும் இந்த மாதிரியான அரசு சார அமைப்புக்கும் கொஞ்சமும் வித்தியாசமில்லை. எனவே, முதலாளித்துவச் சொத்துடமையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, அதன் சமூக விரோதத் தன்மையை அம்பலப்படுத்தாத வரை, இயற்கையையே உடைமையாக்கிக் கொள்ள எத்தனிக்கும் இந்த ஏகாதிபத்தியச் சதியை நாம் முறியடிக்கவியலாது.