வியாழன், ஜூலை 24, 2008

விடியாமல் முடியாது..

ஏ.. சமூகமே எங்கே செல்கிறாய்?
பெயர்ப்பலகை இல்லாத பேருந்து போல‌
சேறுமிடம் அறியாமல் செல்லும் நீயும்,
இலக்கில்லாமல் பாயும் அம்பு போல‌
அர்த்தமற்று போகும் உன் வாழ்வும்.
எதிரிகளாலும், துரோகிகளாலும்
உன்னைச் சுற்றி எழுப்பப்பட்ட சவக்குழிகள்
உனக்காக என்றபோதும் ஏனிந்த அமைதி.
அடிப்படை உரிமைகளே பறிக்கப்பட்டாலும்
ஆன்மீகச் சிந்தனை வருவதேன்?
அடக்குமுறைகளே அரசின் முகமாயின்
உதாவாத அஹிம்சை ஏன்?
ஒடுக்கப்பட்ட மக்களே எங்கு காணினும்
நம்மில் ஒற்றுமை இல்லையே ஏன்?
ஒட்டுமொத்த உலகமே...
விவசாயி, தொழிலாளியால் இயங்கும் போது
ஒன்றுசேர்ந்து போராட மறுப்பதேன்?
போராட தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
நம்மில் ஒருவன் நிச்சயம் இறக்கிறான்.
போகிற உயிர் போரட்ட‌த்தில்தான் போகட்டுமே...!
வாழ்வாவ‌து முழுமைபெறும்.
அடிப்படை தேவைகள்கூட பூர்த்தியாகாத சமூகத்தின்
அவலநிலை சொல்லித்தெரிய அவசியமில்லை.
இருந்த‌போதும்
வேலையின்மை, விலைவாசி உய‌ர்வு, ப‌ண‌வீக்க‌மென‌
உயிர்கொல்லிக‌ளை ச‌மூக‌த்தில் ஊடுருவ விட்டு
வேடிக்கைப்பார்க்கும் "உலகின் மிகப்பெரிய‌" ஜ‌ன‌நாய‌க‌ம்.

அவலங்கள் சில‌....

சிறிய‌, பெரிய‌ க‌ட்டுமான‌ நிறுவ‌ன‌ங்க‌ள் த‌ங்க‌ளின் கூலித்தொழிலாள‌ர் ப‌ற்றாக்குறையால் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌வும் அத‌ற்கு வெளிநாட்டிலிருந்து அழைத்துவ‌ர‌ மையஅர‌சிட‌ம் ம‌னு கொடுத்துள்ள‌ன‌ர்.
சொந்த‌ நாட்டில் அக‌திக‌ளாய் மாநில‌ம் கடந்து அடிப்ப‌டை வ‌ச‌தி இல்லாம‌ல் சாப்பாட்டிற்கே அல்ல‌ல்ப‌டும் கூலித்தொழிலாள‌ர்க‌ளின் நியாய‌மான‌ எதிர்பார்ப்பில் ச‌ரியான‌ கூலியும், ஓய்வும் கிடைத்தால் இங்குள்ள‌ ம‌க்க‌ள்ச‌க்தி போதாதா என்ன‌?

சமச்சீர்கல்வி இல்லாமல் காசுக்கேத்த கல்வியென அடிப்படைகல்விக்கு புதுஅத்தியாயம் எழுதிய இந்த பணநாயகத்தில் மாணவர்கள்மட்டுமா, ஆசிரியர்களும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனரே.
அரசும், அதிகாரிகளும் போட்ட துப்புகெட்ட சட்டமான மாவட்ட வாரியான பதிவுமூப்பின்படி நியமனம் என்பதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பட்டயப்படிப்பு முடித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, கடந்த ஏழுமுறை பணிநியமனம் அனுப்பியும் குறிப்பிட்டு கன்னியாகுமரியில் ஒருவருக்குகூட வேலைகிடைக்கவில்லை.
தென்மாவட்டத்தில் உள்ள பயிற்சிபள்ளிகளில் ஒவ்வொன்றிலும் 50 ஆண் பெண் என மொத்தமாய் அங்கு 2000 பேர் வெளிவந்தும், சமூகத்தின் தேவை இருந்தும் தேவையில்லாத சட்டத்தின் அடிப்படையில் வீணடிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர் துயரம் மீளாத்துயராய், திமிர்ப்பிடித்த இலங்கை கடற்படையினரால் சுடப்படும்போது அரசின் செயல்பாடும், நிலைப்பாடும் எப்படி உள்ளது.
ஒரு குடும்பத்தின் தலைவன் இப்படி திடீரென இறந்துபோனால் அக்குடும்பம் அடையும் வாழ்நாள் துயரம் எவ்வளவு பணத்தில் (அ) எந்த வார்த்தையில் சரிகட்ட முனைகிறார்கள்.


போலிஅரசியல், ஆன்மீகம், ஆடம்பரம், கிரிக்கெட், சுயநலம், சினிமா கழிசடைகள் போன்ற போதைகளில் மூழ்கித்திளைக்கும் இளையசமுதாயத்தின் அக்கறையும் நிலையும் கூட கவலைக்கிடம் தான்.

பணநாயக அரசியலில் மூத்தவர்களை முந்தும் இளைஞர்கள். இந்தியாவின் மேகாலயாவின் இளம் MP-யான அகதா(27) நேற்று நடந்த நாடாளுமன்ற கூத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள வந்தவர், "அணுசக்தி ஒப்பந்தம் பற்றி என்னவென்றே தனக்கு தெரியாது, இருந்தும் நான் ஆதரிக்கிறேன்" என்கிறார். இளைஞர்களாக உள்ள ராகுல் போன்றோரின் செயல்பாடுகள் விரும்பத்தக்கதாகவும், அதனாலேயே தானும் ஈர்க்கப்படுவதாக கூறி(கூட்டத்தில் கோவிந்தா) தனது நிலையை வெளிப்படுத்தினார்.

எல்லா கூத்தும் அரங்கேறிய அந்த பன்றிக்கூடத்தில் நேற்று இந்திய ஜன(பண)நாயகத்தின் கோவணம் அவிழ்த்துக்காட்டப்பட்டது. MP-க்களின் சந்தைவிலை நேற்று வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வின்னை முட்டியது. நம்பிய மக்களை நாசம் செய்த MP-க்கள் நல்ல விலைக்கு வித்துக்கொண்டதுடன் தங்களை ஒரு தேசிய போராளியாக காட்டிக்கொண்டனர். இந்த வீணர்களின் வெற்றி விமர்சனமாய் ராகுல்காந்தி பேசும்போது, ராஜிவ்காந்தி, நரசிம்மராவ் இவர்களின் சீர்திருத்த‌ப்பாதையில் பிரதமரின் பணி தொடருமென கூக்குரலிட்டார். கட்சிகள் மாறி ஓட்டுப்போட்டதும், கொள்கைகள் முரண்பாடானதும், பணமே அனைத்திற்கும் தலைமை வகிப்பதும் உலகமே நேரடியாக பார்த்ததில் இந்திய ஜன(பண‌)நாயகம் நிர்வாணமாய் போஸ் கொடுத்தது.

541 பன்றிகளும் மூன்று பிரிவாக பிரிந்து மாறி யோக்கியசிகாமணிகளாய் உள்கூட்டு விபசாரத்தில் தங்களின் நாடகத்தை அரங்கேற்றி மக்கள் அனைவரையும் முட்டாளாக்கினார்கள் (அப்பவாவது நமக்கு கோவம் வ‌ந்து உருப்படியா எதையாவது செய்யமாட்டோமா என்பதாய் கூட நாம் எடுத்துக்கொண்டிருக்கலாம்). ஆனாலும் Match Fixing போல நம்பிக்கை ஓட்டெடுப்பின் முடிவை அறிவிப்பதற்கு முன்னதாகவே அமெரிக்க ஏகாதிபத்திய திமிர் வெளிக்கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பின் வெற்றிக்காக‌ மன்மோகன்சிங்‍கை வாழ்த்தியது. எரியிர கொள்ளியில தலைவிட்டது போல, தேவையை காரணம் காட்டி தேவையில்லாத திட்டத்தில் மக்களின் வரிப்பணம் அம்போவென போகிறது. மக்கள் விழிப்பார்களா?

110 கோடி மக்களில் 80 விழுக்காடு மக்களின் தினசரி வருமானம் 20 ரூபாய்க்கும் குறைவென அரசின் குறிப்பு சொல்கிறது. உலகத்துக்கே சோறுபோட்ட விவசாயிக்கு சோறு இல்லையென கைவிரிக்கும் கைய்யாலாகாத அரசு, பொறுப்புகளை கைகழுவும் பொறுப்பில்லாத அரசு, டாஸ்மார்க் மட்டுமே நிர்வாகம் பன்னதெரிந்த அரசு, சமீப காலத்தில் பொருளாதாரத்திலும் விவசாயத்திலும் தன்னிறைவு பெற்றதாக கூறும் தன்மானமில்லாத இந்த அடிமைவல்லரசு கடந்த 10 ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாயிகளை ஈவிரக்கமின்றி திட்டமிட்டே கொலைசெய்துள்ளது. 15கோடி ஹெக்டேர் நிலம், வருடத்தில் 220 நாள் சூரியஒளி, 880 மி.மீ மழை,மிகப்பெரிய மனிதவளம் இருந்தும் அரசியல் ரீதியில் சரியான கொள்கையும் மன உறுதியும் இல்லாததால் பசி, பஞ்சம், விலைவாசி உயர்வு, பணவிக்கம்.............எல்லாம்.

பதுக்கல், கள்ளசந்தை, முன்பேரவணிகம்.....முதலானவற்றை இரும்புக்கரம்கொண்டு அடக்கவும், தீர்வாய் எல்லோருக்குமான பொதுவிநியோகமுறையை நெறிப்படுத்தவும் ஒன்றிணைந்துப் போராடாமல் தானாய்மாறும் என்பதைப்போல் வாய்ப்பேதும் இருப்பதாய் உறங்கிக்கொண்டே கனவுகாணாதீர்கள்.

வெள்ளி, ஜூலை 04, 2008

க‌ழுத்தை நெறிக்கும் விலைவாசி, கால‌ தாம‌த‌மின்றி கொஞ்சம் யோசி!


தற்ப்போது நிலவிக்கொண்டிருக்கும் நிதி நெருக்கடி, விலைவாசி உயர்வு, பண வீக்கம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வர இயலாமல் இருக்கும் வக்கற்ற மத்திய மாநில அரசுகளின் தெனாவட்டுப்போக்கும், பொய்யான வதந்தி பரப்பும் கீழ்த்தரமான‌ செயலும், மக்களின் விழிப்புனர்வை விரும்பாமல் அவர்களை திசை திருப்பும், அவர்களின் புத்தியை மழுங்கடிக்கும் வேலையைத்தான் இன்றைய நாளில் அனைத்து ஊடகங்களும் (All TV Channels, Daily, Weekly, Monthly Magazines), செய்து கொண்டிருக்கின்றன. முழுவதும் வர்த்தகத்தையும் சுயநலத்தையும் அடிப்படையாகக் கொண்ட இவர்களைப்போலவே நம் நாட்டின் எல்லா அரசியல் வியாதிகளும் உங்களுக்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதைப்போலவும் தங்களை காட்டிக்கொள்ளவே சொந்த ஊடகங்களின் மூலமாக வியாபார அடிப்படையில் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கின்றன.

தோழர்களே, ஓவ்வொரு கண்மும் நம்மைச்சுற்றியும் நம் சமுதாயத்தைச் சுற்றியும் பின்னப்படும் சதிவலைகளை கண்டறிந்து களைய வேண்டியது நம் சமுதாய கடமையாகும். தற்போதைய நிலையில் என்ன நடக்கிறது? யாரால் எதனால் நடக்கிறது என்பதறிய வேண்டியதன் அவசியம் உணர்வீர்களாயின் நம் சிந்தனையும் செயலும் ஒன்றுபட்ட புரட்சியினால் நடப்பவை களைந்து நன்மை பயக்க வழிகோலும்.

போலி கம்யூனிஸ்டுகளின் மக்கள் விரோதப்போக்கும், மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ் எனும் பூச்சாண்டி நாடகமும் 'தொலைக்காட்சி மெகா சீரியல்களை' தோற்க்கடித்து வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை கடந்து நடந்து கொண்டிருக்கும் போது அவ்வப்போது வரும் திருப்புமுனைக்காட்சிகள் போல...4-ம் தேதி கெடு விதித்திருப்பதாகவும், அதோடு கூட்டணி உறவை முறித்துக்கொள்வதாகவும் அறிக்கை விட்டுள்ள இந்த போலிகளின் முடிவற்ற நாடகமும், ஒத்திகையும் இவர்கள் எப்போதும் பிழைப்புவாத நடவடிக்கையில் தான் தொடர்ந்து இருப்பார்கள் என்பதில் எள் அளவும் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கும் நிலைப்பாட்டினை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும் தோழர்களே., விலைவாசி உயர்வும், பணவீக்கமும், பெட்ரோல், டீசல் விலை உயர்வும் அதன் காரணமான லாரிகள் வேலை நிறுத்தமும், அதனால் தொடர்ந்த அத்தியாவசியப்பொருட்கள் தட்டுப்பாடும், அதைப்பயன்படுத்தி லாபம் பார்த்த பதுக்கல்காரர்களும், இவற்றை சரிசெய்ய இயலாத இந்த அடிமை வல்லரசின் பிற்ப்போக்கு நிலைப்பாடும், மக்களின் துயரம் யாராலும் துடைக்கப்பட முடியாமல் போவதையும் கண்கூடாகப்பார்த்த பின்னும் இவை அனைத்திற்கும் நிஜமான மூல காரணமான‌ த‌னியார்ம‌ய‌ம், தாராள‌ம‌ய‌ம், உல‌க‌ம‌ய‌ம் கொள்கைக‌ள் தான் என்ப‌தை அறிவீர்க‌ளா? அறிந்து அடியோடு தூக்கி எறிய‌ ஓர‌ணியாய் திர‌ள்வீர்க‌ளா?

லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள 1.20 லட்சம் வேன்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வேன்கள், கார்கள் வேலை நிறுத்தத்தினால் எத்தனை லட்சம் தொழிலாளர்கள், பள்ளி செல்லும் குழ‌ந்தைகளின் பாதிப்பு, இந்த லாரி ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் மட்டுமின்றி அதை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் பிழைக்கும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை என்னவானது என்பதை சற்று சிந்திக்க வேண்டும் தோழர்களே.

காய்கறிகள், கனிகள், பூ இவைகளின் திடீர் தட்டுப்பாட்டுக்கும் விலையேற்றத்துக்கும் மாற்றுவழி செய்திருப்பதாய் கூக்குரலிடும் அடிமைவல்லரசின் கைகூலி அரசாங்கம் உண்மையில் வெறுமனே வேடிக்கைமட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது. அதற்கு உதாரணம் சென்னை உட்பட பல நகரங்களில் டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் விற்க்கப்பட்டது. மேலும் சில நகரங்களின் உண்மை நிலைப்பாடுகள்....

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 750 கோழிப்பண்ணைகளில் தினமும் 2.50 கோடி முட்டைகள் தேக்கமும், அவற்றிற்க்கான தீவனத்தட்டுப்பாடும் அங்குள்ள தொழிலாளர்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

ஓசூரில் உள்ள பத்தலப்பள்ளி தக்காளி வியாபாரத்துக்கு பிரபலம். இங்கு 100 டன் தக்காளி தேக்கமடைந்துள்ளது, தினமும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய தக்காளி அழுகி வீணாகும் நிலை உள்ளது.

குன்னூரில் லாரிகள் ஓடாததால் 20 கோடி மதிப்பிலான தேயிலைத்தூள் தேங்கியுள்ளது, மேட்டுப்பாளையத்தில் காய்கறி மண்டியை நம்பி ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கூலித்தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் தங்களின் வருமானத்தை (அதாவது அந்த அரை வயித்துக் கஞ்சிக்கும் வச்சிட்டானுங்க வேட்டு) இழந்துள்ளனர்.

நெல்லையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பீடி அனுப்புவது அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது, பீடி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை பெரிய நிறுவனங்கள் ஸ்டாக் வைத்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால் அங்கு மேலும் நெருக்கடி நிலை உருவாகி உள்ளது.

பரமக்குடி லாரிகள் வேலை நிறுத்தத்தால் பலகோடி ரூபாய் மதிப்பிலான மிளகாய், பருத்தி தேக்கமடைந்துள்ளது. இதன் காரணமாய் இந்த சரக்குகள் கமிஷன் மண்டிகளில் தேங்கியுள்ளன. இந்த நிலையால் அங்குள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள், டிரைவர், க்ளீனர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆந்திரா, ஒரிசாவில் இருந்து திருச்சிக்கு சரக்கு ரயிலில் அரிசி, உரம் வந்துள்ளன. லாரிகள் வேலை நிறுத்தத்தால் இவை இறக்கப்படவில்லை. ரயில் வந்த 9மணி நேரத்துக்குள் சரக்குகளை இறக்காவிட்டால் மணிக்கு ஒரு பெட்டிக்கு ரூ.100 காத்திருப்பு கட்டணம் செலுத்த வேண்டும். இப்படியாக காத்திருக்கும் பெட்டிகளுக்கு தினமும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 400 ரூபாய் செலுத்தப்படுகிறது.

வர்த்தக சிலிண்டரின் விலையே ஒரு நிலையில்லாத தன்மையாய் இருக்கிறது.
March 2008 - ரூ.1102.65
April 2008 - ரூ.1122.52
May 2008 - ரூ.1093.30
June 2008 - ரூ.1172.30
July 2008 - ரூ.1231.௨0

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைதான். உதாரணத்துக்கு சில உண்மை நிகழ்வுகளையே உங்கள் முன் வைத்தேன்.
இந்தியாவின் மக்கள்தொகை 112 கோடியில் பெரும்பான்மையானோர் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் உற்ப்பத்தியை வைத்துக்கொண்டு அவர்களையே பட்டினி போடும் நன்றி கெட்ட, விசுவாசமில்லாத, நேர்மையில்லாத சுயநல பாசிச தலைமைக்கு, அவர்களின் உற்பத்தியை பாதுகாக்க கூட வக்கில்லாமல் போனது. மத்திய அரசுக்குச்சொந்தமான Food Corporations of India (FCI) கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் டன் தாணியங்கள் வீணாகியுள்ளன. மீதமுள்ளவற்றை கெடாமல் பாதுகாக்க FCI 242 கோடி செலவிட்டுள்ளது. கெட்டுப்போன தாணியங்களை அகற்ற 2.59 கோடி செலவழித்துள்ளது. இதிலிருந்து இவர்களின் நிர்வாகத்திறனை நன்றாக நாம் அறிந்துகொள்ள முடியும்.


11-வது ஐந்தாண்டுத்திட்டம் குறித்து விவாதிக்கும் அறிவுஜீவிகள் கடந்த 1௦0- ஐந்தாண்டுத்திட்டங்களின் நோக்கமும், அவற்றிற்கு ஒதுக்கீடு செய்த தொகையும், செயல்பாடுகள் குறித்த விளக்கமும் மக்களிடம் ஒளிவு மறைவின்றி நேர்மையாக ஒப்படைக்கவும், விவாதிக்கவும் இங்குள்ள எந்த ஓட்டுப்பொறுக்கி நாய்களுக்கும் தைரியம் கிடையாது. தன்மானமில்லாத தற்குறிகள், சுயநலத்திற்க்காக கொள்கையையும் நம்பிய மக்களை ஏமாத்தும் நயவஞ்சகர்கள். பசியும், பட்டினியும் கோரத்தாண்டவம் ஆடி மக்களை கொன்று குவிக்கும் மிகக்கேவலமான அரசியல் கொள்கைகளை வகுத்து கூறுபோட்டு தாய்நாட்டை அன்னியனுக்காக காவுக்கொடுத்தவர்கள். இவர்களா நம்மை கரை சேர்க்கப்போகிறார்கள். இன்னுமா இவர்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். "விடியாமல் முடியாது" என்பது போல நாம் விழிக்காமல் இருக்கும் வரை நமது துயரங்களும் விடியாது. நமது கவலை எப்படியாய் இருந்தாலும் அதை கண்டுகொள்ளாத அல்லது கண்டு கொள்வதுபோல் நடிக்கின்றவர்கள் தான் இங்குள்ள எல்லா ஓட்டுபொறுக்கி கட்சிகளும். தரகுவேலை பார்க்கும் வெட்கம் கெட்ட, மானங்கெட்ட மக்குமோகன் சிங், ச்சித்தம்பரம், அத்துவானி, கர்நாநிதி, செல்வி.செயலலிதா, அவர்களின் கவலையெல்லாம்...அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இடதுசாரி மாமாக்களை எப்படி சமாளிப்பது, காஷ்மீர் அரசை எப்படி காப்பாற்றுவது, மக்களவை, சட்டசபைத்தேர்தலை எப்படி சந்திப்பது போன்ற பிழைப்புவாத அடிப்படையிலேயே தங்களின் அறிய மூளையை செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்
(இதில் எந்த ஓட்டுக்கட்சியும் விதிவிலக்கல்ல).

உலகின் அனைத்து நாடுகளின் பிரச்சனைகளுக்கும் மிகவும் நேரடியான‌ காரணகர்த்தாவாய் விளங்கும் அமெரிக்காவும் (புஷ்) அதன் பின்னணியாய்ச் செயல்படும் பல அமைப்புகளும் உலகத்தை கூறுபோட்டு தின்றுகொண்டிருக்கும் பிணந்திண்ணி கழுகுகள். அந்த கழுகுக‌ளில் ஓன்றுதான் வாஷிங்டனில் இருந்து செயல்படும் World Value Survey. இந்த அமைப்பு இந்திய மக்களிடம் மகிழ்ச்சி அதிகரித்து வருவதாகக்கூறி அறிக்கை வெளியிட்டுள்ளான் அந்த ஆய்வின் தலைமை அதிகாரி ரெனால்ட் இங்கெல்ஹர்ட்.

ஆகவே தாமதம் வேண்டாம், விழித்துக்கொள்வோம்.விரட்டி அடிப்போம் தனியார்மயம், தாராளமயம், உலகம‌யம் என்ற வக்கிரகொள்கைகளையும் அதைபற்றிக்கொண்டிருக்கும் மனித பிசாசுகளையும்.