புதன், செப்டம்பர் 10, 2008

சமுதாயம் எங்கே போகிறது...?

பொருளாதார‌ மேம்பாடு என்ற‌ உயர்ந்த‌ நோக்க‌த்தில் ந‌ம் நாட்டு பொருளாதார‌ மேதைக‌ளும், அறிவு ஜீவிக‌ளும் ஏகாதிப‌த்திய‌ கொடுங்கோல‌ன் அமெரிக்காவின் உறுதுணையோடு இற‌க்கும‌தி செய்த தனியார்மயம், தாராளமயம், உல‌க‌ம‌ய‌ம், போன்ற‌ வ‌க்கிர‌கொள்கைக‌ளால் ம‌க்க‌ள் ம‌டிந்துகொண்டிருக்கின்ற‌ன‌ர். ஏற்க‌ன‌வே மாற்றாந்தாய் ம‌ன‌ப்பான்மையோடு கிராம‌ங்க‌ளை ந‌ட‌த்திய‌ அர‌சிய‌ல்வாதிக‌ளும்,அதிகாரிக‌ளும் திட்ட‌மிட்டே இத்திட்டங்களை அமல்படுத்தி இவ‌ற்றை அழிக்க‌ முய‌ற்சியில் மக்களின் எதிர்ப்புகளையும் மீறி இர‌வு ப‌க‌லாக‌ செய‌ல்ப‌டுகிற‌ன‌ர். அதனால் வசிக்கத்தகுதியற்ற வெற்று நிலங்களாகிக் கிடக்கின்றன கிராமங்கள்.


வறட்சி, தனிமை, புறக்கணிப்பு இவற்றைத் தாங்கிக் கொள்ளக் கூடியவர்கள் நகரத்தின் பகட்டையும் போலித்தனத்தையும் வெறுக்கின்றனர். எனவே, நகரங்களைப்போல அரைவேக்காட்டு உணவை உண்டு அரைவேக்காட்டுத்தனமாய் வாழாமல் வெந்ததைத் தின்று வாழ்க்கையை நடத்துகின்றனர் கிராமங்களில். நகரத்தை மட்டுமே குறிவைக்கும் நவீனமும் நலத்திட்டங்களும் விவசாயத்தையும் அதை நம்பிப் பிழைத்தவர்களையும் நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டன. தொலைக்காட்சியும், செல்போன்களும் கிராமங்களை அடைந்துவிட்டனதான்... அதனாலேயே கிராமங்கள் வளர்ந்துவிட்டதாகவும் தன்னிறைவு பெற்று விட்டதாகவும் நாம் கூற முடியுமா? ஜாதியால் தவிக்கும் மக்கள், சும்மா கிடக்கும் நிலங்கள், இல்லாத மின்சாரம், வராத குடிநீர், செப்பனிடப்படாத சாலைகள், அவசரத்துக்கு உதவாத மருத்துவ மனைகள், தரமற்ற கல்விக் கூடங்கள் என கிராமங்கள் தேய்ந்து சோர்வுற்று அழிந்து கொண்டிருக்கின்றன.

விவசாயத்தை செழிக்கச் செய்து நாட்டின் பொருளாதாரத்துக்கு துணை நின்ற விவசாயிகள் இன்று என்ன ஆனார்கள். அங்கே வடக்கில் விதர்பா மாவட்டத்தில் எத்தனை ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நெல்லும், கரும்பும், கடலையும், தென்னையும் செழித்த பூமி இன்று பன்னாட்டு நிறுவனங்களின் நில வேட்டையில் குறி பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் முதுகெலும்பு ஒடிந்து நாட்களாயிற்று! சேற்றில் துவண்டு சோறு போடுகின்றவர்களை அரசு புறக்கணித்துவிட்டது. நகர மோகத்தில், விரைகிற வேகத்தில் நாமும் மறந்துவிட்டோம்.

இந்தியா என்பது சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா மட்டுமன்று. அது லட்சக்கணக்கான கிராமங்களை உள்ளடக்கியதே. தமிழகம் என்றால் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, வேலூர், திருநெல்வேலி, கோவை மட்டுமன்று; ஏறத்தாழ 37,000 கிராமங்களையும் உள்ளடக்கியதே! அடிப்படை மருத்துவ வசதியில்லாத, முதலுதவி, மகப்பேறு மற்றும் தடுப்பூசி போன்ற வசதிகள் மறுக்கப்பட்டவையாகவே இன்றும் இந்திய கிராமப்புறங்கள் உள்ளன. தங்க நாற்கரச் சாலையில் வசதியான இந்தியர்கள் நாட்டைச் சுற்றி வலம் வரும் இந்த நாளில்கூட, நோய் வாய்ப்பட்டால் தூளியில், தோளில் சுமந்து மலை அடிவாரத்திற்கு வந்து சேரும் முன்னரே செத்துப்போகும் மலைவாழ் மக்கள் இங்கே உண்டு. குழந்தை பிறக்காமல் தாயின் வயிற்றிலேயே பிணக்குழி காணும் குழந்தைகள், செத்துப்போன குழந்தையோடு பாடை ஏறும் பெண்கள் இந்த நாட்டின் அவலம்.

எந்த மக்களின் பணத்தில் தாங்கள் படிக்கிறோமா, எங்கு தங்கள் வேர் உள்ளதோ, அந்த மக்களுக்காகப் பணியாற்ற மாணவர்களும் விரும்பவில்லை எனில், அம்மக்களின் நிலை என்னாவது? மருத்துவப் படிப்பிற்காக அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செலுத்தும் ஆண்டுக் கட்டணம் வெறும் 4,000 ரூபாய் மட்டுமே. இவர்களைப் பயிற்றுவிக்க ஆகும் பிற செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கிறது. அரசின் பணம் என்ன அரசியல்வாதிகளின் பணமா? அது மக்களின் பணம். நாம் வியர்வை சிந்த உழைத்து கட்டிய வரிப்பணம்! அந்தப் பணத்தில் சுகபோகமாக படித்து முடிக்கிறவர்கள்தான் கிராமப்புற சேவையை மறுக்கிறார்கள். மருத்துவத்தை வியாபாரமாக்கிய கேவலம் இந்தியாவில்தான் மிக மோசமாக நடந்திருக்கிறது. சிறந்த மருத்துவ சேவைக்கு முன்னுதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கும் கியூபாவைப் பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

150 குடும்பங்களுக்கு ஓர் ஆரம்ப சுகாதார மையம். மருத்துவர் அச்சுகாதார மய்யத்திலேயே தங்கியிருப்பார். அதாவது, மருத்துவரின் வீடும் மருத்துவமனையும் ஒன்றாக அமைந்திருக்கும். இதனால் மக்கள் மருத்துவரை எந்நேரமும் அணுகக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. காலையில் புறநோயாளிகளை கவனித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர், நண்பகலுக்குப் பிறகு வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய நோயாளிகளை கவனிப்பார். பின்னர் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் முறைகள் குறித்து சொல்லிக் கொடுப்பது, அப்படி இல்லாத சுற்றுப்புறங்களை சீரமைப்பது குறித்து மக்களுடன் ஆலோசனைகள் நடத்துவது என மக்களுடன் இணைந்து பணியாற்றுவார்.

இவை அனைத்திற்கும் மேலாக, மருத்துவத்தை ஒரு தொழிலாக செய்வது இங்கு சட்டப்படி குற்றச் செயலாகும். அனைவருக்கும் மருத்துவ சேவை இலவசமாகவே வழங்கப்படுகிறது. தங்கள் நாட்டில் உள்ள அதிகப்படியான மருத்துவர்களை, உலகில் போரினால் அல்லது இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருத்துவ சேவை செய்ய, அரசு தனது சொந்த செலவில் அனுப்பி வைக்கிறது. கியூபாவில் உள்ளது போல் இங்கு மருத்துவத்தை ஒரு தொழிலாகச் செய்வது, சட்டப்படி குற்றமாக்கப்படவில்லை. மருத்துவர்கள் கண்டிப்பாக அரசுப் பணியில்தான் ஈடுபட வேண்டும் என்று நிர்பந்திக்கப்படவில்லை. அரசு மருத்துவர்களை கட்டாயப்படுத்தி வெளிநாடுகளுக்குச் சேவை செய்ய அனுப்பவில்லை.

எப்படி இந்தியாவின் உழைப்பாளர்களும், இந்திய மூளைகளும், இந்திய வளங்களும் எடுத்துக் கொள்ள ஆளின்றி சந்தையில் மலிவு விலைக்கு கிடைக்கச் செய்யப்படுவதன் காரணமாகவே குறை கூலி பிரதேசமாக இந்தியா அறியப்பட்டு ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாகியுள்ளதோ - அது நியாயப்படுத்தப்படுகிறதோ - அதே போல மருத்துவ பரிசோதனை ஆய்வுக‌ளில் இந்திய‌ நோயாளிக‌ளையே நேர‌டியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். மருந்தையும் மருத்துவத்தையும் எட்டாக்கனியாக்கியதன் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

மறுகாலனியாதிக்கம் எதைத்தான் விட்டு வைத்துள்ளது? குர்ரைந்த் கூலிக்கு உழைப்பு சக்தி வேண்டும் என்பதற்க்காக விவசாயம் சாகடிக்கப்பட்டு ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை, குறைந்த கூலிக்கு இந்திய மூளைகள் என்பதற்க்காக தன்மானத்தை அடகுவைத்த தற்குறிகளின் தேசம், கூந்தலை விற்று பிழைக்கின்றனர் ஆந்திர பெண்கள், மானத்தை விற்றும்.., சுமங்கலி திட்டத்தில் நவீன கொத்தடிமைகள் கல்யாண கனவுகளுடன், நாய்கள் சுதந்திரமாக அலைந்து தெருக்களில் குதறி தள்ள குழந்தைகளோ கொத்தடிமைகளாக கட்டுமான கூடங்களில், பிரவச வேதனையையும் கூட அவுட் சோர்ஸ் செய்து இந்திய பெண்களை வாடகைத் தாய்களாக்கி விட்டது…. பாரத மாத கி ஜெய். இதோ நமது நோய்களையும், நோயாளிகளையும் கூட அவுட் சோர்ஸ் செய்துவிட்டனர். இது பிணங்களின் நாடாக மாறினாலும் கூட குறைந்த விலை சுடுகாட்டு கூடமாகவும் இந்தியா அவுட் சோர்ஸ் செய்யப்படும்.

இயற்கைச் சிக்கல்களை தமது மனத்தகவமைப்பின்படி எதிர்கொண்டு வாழ்ந்தாலும் அவர்களுக்கு வேறு சில சிக்கல்கள் இருக்கின்றன. அவை சாதியச் சிக்கல்கள். அந்த மலைவாழ் மக்கள் தமது குடியிருப்பைச் சுற்றியிருக்கும் வயல்களிலும், தோப்புகளிலும் சாதி இந்துக்களுக்கு வேலை செய்யாமல் போனால், வயல்களின் ஊடே போகும் ஒற்றையடிப் பாதையில் நடக்க முடியாது. குடிப்பதற்கு என வயல்களின் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்க முடியாது. இந்திய கிராமங்களின் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்று. இன்னமும் மாறவில்லை இந்திய கிராமங்கள்!

‘இந்துச் சமூகம் தீண்டத்தகாத மக்களைப் பிரித்து வைப்பதை வலியுறுத்துகிறது. ஓர் இந்து தீண்டத்தகாதவரின் குடியிருப்பிலோ, ஒரு தீண்டத்தகாதவர் இந்துவின் குடியிருப்பிலோ வசிக்க முடியாது. இது, சமூகப் பிரிவினை மட்டுமல்ல, சமூக உறவை தடுப்பதற்கானதொரு தடை. அசுத்தமான மக்களை குகைகளில் வைத்திருப்பது போன்றதொரு வாழ்விட ஒதுக்குமுறை. எல்லா இந்து கிராமங்களும் ஒரு சேரியைக் கொண்டிருக்கின்றன. இந்துக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள் (ஊரில்) தீண்டத்தகாதவர்கள் சேரிகளில் வாழ்கிறார்கள்.' இந்திய கிராமங்களைப் புரிந்துகொள்ள அடிப்படையான பார்வை இதுவன்றி வேறல்ல.

தாக்குதல், அவமானப்படுத்துதல், ஒதுக்கி வைத்தல், கொல்லுதல் என எந்த மனித உரிமை மீறல்களுக்கும் இந்தியாவில் எதிர்ப்புக் குரல்கள் பெரிய அளவில் எழும்புவதில்லை. சாதியப் படிநிலைப்படுத்தப்பட்ட மதவெறியும், குறுங்குழுவாதமும் கொண்ட சமூகம் இந்தியச் சமூகம். இங்கே மனித உரிமை மீறல்களே சமூக நியதிகளாக உள்ளன. எனவேதான் அம்மீறல்கள் குற்றங்களாகக் கருதப்படுவதில்லை. பெண்களை ஒடுக்குவது, குழந்தைகளை வதைப்பது, தலித்துகளை கொல்வது அல்லது இழிவுபடுத்துவது என எல்லாமே இந்திய சனாதன சமூகத்தின் எழுதப்படாத சட்டங்கள்.

அதிகாரப்பூர்வமான அரசியல் அமைப்புச் சட்டம் இவைகளை குற்றம் என்றாலும், சட்டத்துக்கு உட்படாத சட்டங்களின்படி இவை குற்றங்களாகக் கருதப்படுவதில்லை. இந்த இழிநிலையுடன் அபாயகரமான ஓர் அம்சம் இணைந்து கொண்டுள்ளது. இந்தச் சட்டமில்லாத சட்டங்களுக்கு அரசும் நிர்வாகமும் துணை நிற்கின்றன. இந்தச் சூழல் மனித உரிமைகளுக்கான மதிப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. இந்தியா முழுக்கவும் நாள்தோறும் நடக்கும் எண்ணற்ற மனித உரிமை மீறல்களில், ஒரு சில மீறல்களே ஊடகங்களில் வெளியாகின்றன. ச‌ந்தேக‌ம் இல்லாம‌ல் இந்த‌ அனைத்து சாதி,மத சிக்கல்களுக்கு பின்ன‌னியில் இருப்ப‌து இந்துவெறிய‌ர்களான‌ BJP, VHP, RSS போன்றவ‌ர்க‌ளே....

நேற்றைய‌ நாளித‌ழில் இலை.க‌ணேச‌ன் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாக செலவுக்கு நிதி தாருங்கள் என்று அறிக்கை வந்தது. ஏற்க‌ன‌வே ம‌னித‌ச‌மூக‌ம் ம‌ற‌க்க‌ முடியாத‌ அள‌விற்கு கொடுமைக‌ளை அர‌ங்கேற்றியுள்ள‌ இந்த‌ துரோகிக‌ள் ம‌றுப‌டியும் எவ்வள‌வு கொழுப்பிருந்தால் ம‌க்க‌ளிட‌மே பிச்சை கேட்டு கொள்ளையடிக்க‌ அறிக்கை விட்டிருப்பார்க‌ள்.

ம‌ற‌ந்து விட‌ வேண்டாம் ந‌ண்ப‌ர்க‌ளே....
அயோத்தி,குஜராத் கலவரம் முதல் அமர்நாத் கலவரம் வரை கண்முன்னே எண்ணிலடங்கா உயிர்களை காவு வாங்கிய கொலைவெறியர்களின் கறுப்பு வரலாறு.

110 கோடி மக்களில் 80 விழுக்காடு மக்களின் தினசரி வருமானம் 20 ரூபாய்க்கும் குறைவென அரசின் குறிப்பு சொல்கிறது. உலகத்துக்கே சோறுபோட்ட விவசாயிக்கு சோறு இல்லையென கைவிரிக்கும் கைய்யாலாகாத அரசு, பொறுப்புகளை கைகழுவும் பொறுப்பில்லாத அரசு, டாஸ்மார்க் மட்டுமே நிர்வாகம் பன்னதெரிந்த அரசு, சமீப காலத்தில் பொருளாதாரத்திலும் விவசாயத்திலும் தன்னிறைவு பெற்றதாக கூறும் தன்மானமில்லாத இந்த அடிமைவல்லரசு கடந்த 10 ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாயிகளை ஈவிரக்கமின்றி திட்டமிட்டே கொலைசெய்துள்ளது. 15கோடி ஹெக்டேர் நிலம், வருடத்தில் 220 நாள் சூரியஒளி, 880 மி.மீ மழை,மிகப்பெரிய மனிதவளம் இருந்தும் அரசியல் ரீதியில் சரியான கொள்கையும் மன உறுதியும் இல்லாததால் பசி, பஞ்சம், விலைவாசி உயர்வு, பணவிக்கம்.............எல்லாம்.

தியாகமும் துரோகமும் கலந்தது கடந்த வரலாறு மட்டுமல்ல, நிகழும் வரலாறிலும் தான். எல்லா வேலைகளையும் பிரித்து சாதி உருவாக்கிய பார்ப்பணத்திமிர், உழைக்கும் மக்கள் பொருளாதார சுழலில் சிக்கியும், துரோகத்தின் சந்ததிகளென‌ இன்றும் ஊரை ஏய்க்கும் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பண்ணையார்களும், பணக்காரர்களும் பெருமைப்படுத்தவும் சுக வாழ்வும் வாழும் இழி நிலையை நம் கண் முன்னே கண்டபிறகும் போராடத்தயங்கும் மக்களின் விடியல் சினிமாவில் வருவதை போல வெறும் இரண்டு மணி நேரத்தில் உங்களின் எல்லாப் பிரச்சனைகளையும் தனி ஒரு ஆளாகத் தீர்த்து வைப்பவராக வேறு எவராவது வருவாரென போலி முகங்களை நம்பிக்கொண்டிருக்காதீர்கள்.

ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2008

நன்றி மறந்த நாடு

தாய்நாட்டு விடுதலைக்காக தன்னலம் பாராத தேசபக்தனாக தமிழ் கூறும் நல்லோரில் நம‌க்கு சட்டென நினைவுக்கு வருபவர்களில் வ.உ.சி, மருது, கட்டபொம்மன் குறிப்பிடத் தகுந்தவர்கள். அவர்கள் எந்த அளவிற்கு தாய்மண்ணை நேசித்தார்களோ அந்த அளவிற்கு நாடு அவர்களை நினைவு கொள்கிறதா என்பதற்கு வெட்கித்தலைகுனிய வேண்டிய நிலையில் தான் நம் விடை உள்ளதெனும் நிதர்சனமே நாம் கீழ்க்காணும் காட்சி.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான வ.உ.சிதம்பரம் ஏகாதிபத்திய எதிர்ப்பில் கப்பலோட்டியது மட்டுமில்லாமல் பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங் கோன்மையையும் எதிர்த்து மக்கள் போராட்டங்களின் மூலம்தான் விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற பார்வையில் ஏகாதிபத்தியத்தை நாட்டை விட்டே விரட்டுகிற மாபெரும் சக்தியாகவே வ.உ.சி. தொழிலாளி வர்க்கத்தைப் பார்த்தார். போராட்டமே வாழ்க்கையாக தாய் நாட்டுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, தன்னிகரில்லாத தலைவனாக திருநெல்வேலி சீமையிலே வாழ்ந்த அந்த செக்கிழுத்த செம்மலுக்கு நாம் செய்த கைமாறு என்ன? வாழ்வதற்கு வழி இல்லாமல் நிராதராவாய் மதுரை மூன்றுமாவடி சாலையோரம் தங்கி வாழும் செக்கிழுத்த செம்மலின் கொள்ளுப்பேரனும் பேத்தியும்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இந்த அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவதிப்படும் தியாகத்தின் சந்ததிகள் தங்கள் அடையாளம் இழந்து ஒரு நடைபிணமாய் இருப்பதைக்கண்டு கல் நெஞ்சும் உருகும். ஆனால் ஆட்சியாளர்களும் அரசியல் வியாதிகளும் எதைப்ப‌ற்றி அக்கறை கொண்டார்கள். கவர்ச்சியான வார்த்தைகளால் மக்களுக்கு போதையூட்டி அவர்களை மழுங்கடித்ததைத் தவிர வேறு என்ன செய்தார்கள். அதிகார வெறியும் பதவி போதையும் அவர்களின் காதை செவிடாக்கி கண்ணை குருடாக்கி விட்டது. உற்றார் உறவினரும், கட்டிய சொந்தங்களும் கைவிட்ட நிலையினிலே கடைசியில் ஒட்டியிருந்த துளி நம்பிக்கைக்காக அரசை நாடி நடையாய் நடந்து வெறுத்து இதுதான் தலைவிதி என்ற நிற்கதிக்கு தள்ளப்பட்டனர்.



மறுகாலனி ஆதிக்கத்தை தலைமேல் தாங்கிகொண்டிருக்கும் தரம் தாழ்ந்த அரசானது ஏகாதிபத்திய அடிவருடிகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும் சாதகமாக மட்டுமே சட்டம் இயற்றவும், மூளையை கசக்கி வேலை செய்யவும் முனைகிறது. உண்மையான தியாகிகளுக்கு என்ன செய்ததென பார்த்தால் ஒன்றும் இல்லை. அரசியல் லாபத்திற்காக, வியாபார நோக்கத்திற்காக மட்டுமே அதிகபட்சமாய் சிலை வடிப்பதும் அஞ்சல் தலை வெளியிடுவதோடும் தன் கடனை முடித்துக்கொள்கிறது. மறுபடியும் மறுபடியும் இதையே பெருமை பேசுகிறது.

வரலாறுகளை இருட்டடிப்பு செய்து தியாகத்தின் வாரிசுகளை உதாசினப்படுத்தி நன்றி மறந்த நாடாய் இருப்பதினாலேயே ம‌னிதம் மறந்த இயந்திர மனிதன் உணர்வும் மரத்து சுரனையற்று வாழ்வதால் மறுகாலணி ஆதிக்கமும், ஏகாதிபத்திய கொடுமையும், எதிர்காலச் சிந்தனையும் இல்லாமல் சுயநலமே உருவாய் அடிமை வாழ்வை நோக்கி அடிவைத்துச் செல்வ‌துட‌ன் தன் ம‌ண்ணுக்குறிய‌ மாண்பு அறியாமல் போர்க்குண‌மும் இல்லாம‌ல் ம‌க்கி ம‌ல‌டானான்.

அறிவியல் வளர்கிறது பொருளாதாரம் பெருகுகிறது என்றெல்லாம் பொய் வத‌ந்திகளை பரப்பிவரும் ஓட்டுப்பொறுக்கி அரசியலை இனியாவது உண‌ர்ந்தறிய வேண்டும் நண்பர்களே, இவர்கள் நன்மை செய்வார்கள் என்று இனியும் நம்பினால் நம்மைத்தவிர முட்டாள் உலகில் வேறு யாரும் இல்லை. முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் தான் இந்த அறிவு வள‌ர்ச்சியால், தொழிற்புரட்சியால் வளர்ச்சியடைந்துள்ளன. அவைகளுக்கு சாதகமான சூழலே இங்கு ஏற்படுத்தி கொடுத்திருப்பது இந்த அரசியல் என்பதை அறிய வேண்டும். கூட்டணி விபச்சாரத்தில் கைகோர்ப்பவர்கள் கொள்கையை சீட்டு அடிப்படையில் அடகு வைப்பவர்கள், கூட்டு உடைந்ததும் அவர்களுக்குள்ளே காறி உமிழ்ந்த காட்சியெல்லாம் நீங்கள் கண்ணெதிரே கண்டதுதான். மௌனம் வேண்டாம் நண்பர்களே.... மரணித்துக்கொண்டிருப்பது நாம் மட்டுமல்ல, நாடும் தான்.

தியாகமறிந்த வாரிசுகளே மூன்று தலைமுறை இடைவெளியில் இந்நிலைக்கு ஆளானால் தியாகம் மறந்த நம் நிலை என்ன? சிந்தியுங்கள்.

வியாழன், ஆகஸ்ட் 21, 2008

சுதந்திரம் என்பது பொய், போலி அரசியலின் சூது மட்டுமே மெய்

ஏகாதிப‌த்திய‌த்தின் அராஜ‌க‌ப் போக்கில் ம‌னித‌ன் ஒரு இத‌ய‌முள்ள‌ இய‌ந்திர‌மானான் என்ப‌தில் எள் அள‌வும் சந்தேக‌ம் வேண்டாம். நாடு வ‌ளர்ந்து விட்ட‌து, நாடும் ந‌ம் ம‌க்க‌ளும் செழிப்போடு இருப்ப‌தாக‌ எப்போதும் போல் வதந்தி பரப்பும் ந‌ம் அர‌சிய‌ல்வாதிக‌ள் த‌ங்க‌ள் க‌ட்சி ஆட்சி அமைத்தால் மக்கள் இன்னும் வ‌ள‌ம் பெறுவார் என்ப‌தோடு நாளொன்றுக்கு ஓர் அறிக்கையும், சிற‌ப்பு நாளுக்கு ஓர் வாழ்த்துச்செய்தியும் சொல்ல‌வில்லை என்றால் பெரும்பாலானோருக்கு தூக்க‌மே வ‌ருவ‌தில்லை.

அப்ப‌டிப்ப‌ட்ட‌ நாளொன்று ச‌மீப‌த்தில் போன‌து, அதுதான் ஆகஸ்டு 15. அதற்காக மேன்மை தாங்கிய மக்கள் தலைவர்களென தங்களை உருவகப்படுத்தும் ஓட்டுபொறுக்கிகள் சிலவற்றின் வாழ்த்துச்செய்திகள்....

  • பெற்ற சுதந்திரம் பேணிப் பாதுகாக்கப்பட நாம் அனைவரும் சாதி, மத, இன பேதங்கள் கடந்து ஒன்று பட்டுப் பாடுபட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது இந்த சுதந்திரத் திருநாள். - DMK
  • 35 கோடி மக்களோடு சுதந்திரம் கண்ட நாம் இன்று 100 கோடிக்கு மேலாக உயர்ந்து உலகரங்கிலும் புகழோடு வளர்ந்து வருவதை நினைவு கூறும் இனிய சுதந்திர நாள் இது.- INC
  • 60 ஆண்டுகள் ஆன பிறகு இன்றுள்ள நிலை கவலைக்குரியது. ஒருபுறத்தில் பயங்கரவாதம். மறுபுறத்தில் அன்னிய மோகம், அரசே அடிமை சாசனத்தில் கையெழுத்திட அதீத ஆர்வம் காட்டும் நிலை, மீண்டும் ஒரு பிரிவினை ஏற்படுமோ என்கின்ற சூழ்நிலை. இவைகளை எதிர் கொண்டு சமாளிக்க, வெற்றி பெற்று பெற்ற சுதந்திரத்தை பேணிகாக்க சபதம் ஏற்போம்.- BJP
  • இந்தியா சுதந்திரம் பெற்று இன்று 62-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். எல்லோரும் சமம் என்ற ஜனநாயகத்தை அரசியலில் காப்பாற்றி வருகிறோம் என்பது பெருமைக்குரியது.-DMDK
  • அரசியல் சுயநலத்தை மறந்து, ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை களைந்து, ஒருங்கிணைந்து உழைத்து செயல்பட்டு நமது தேசத்தை வல்லரசாக மாற்றும் வகையிலும் பாடுபட வேண்டும்'-AISMK
  • நாட்டு ம‌க்க‌ளின் எதிர்கால ந‌ல்வாழ்விற்காக நாங்கள் மென்மேலும் கடுமையாக உழைப்போம் என்பதே சுதந்திரம் பெற்றதன் கடமையாகும். -PMK

நாம் சுதந்திரம் பெற்றுவிட்டொம் என்பது ஒரு ஜ‌முக்காள‌த்தில் வ‌டிக‌ட்டின‌ பொய், ஆனாலும் பெற்றுவிட்டதாய் ந‌ம்பும் ப‌ல‌ அறிவு ஜீவிக‌ளுக்கு கேள்வியாக‌வும், அவ‌ல‌ ஜீவ‌ன்க‌ளுக்கு ஒரு விடையாக‌வும் இந்த‌ உரையை வைக்கிறேன்.

மேற்க‌ண்ட‌ வாழ்த்துச்செய்தியில் ம‌க்க‌ளின் த‌லைவ‌ர்க‌ளென‌ த‌ங்க‌ளை சொல்லிக்கொள்ப‌வ‌ர்க‌ள், மக்களை சாதி, ம‌த, இன, மொழிப் பாகுபாடின்றி வாழச் சொல்லி ஒப்புக்கு வாழ்த்துப‌வ‌ர்க‌ள் யார்? அதே சாதி, ம‌த, மொழி, இன‌த் த‌லைவ‌ர்க‌ள் தான். ஊருக்குத்தான் அறிவுரை என்பதுபோல கூட்ட‌ணி விப‌சார‌த்தின் போது கொள்கையை அட‌கு வைப்ப‌வ‌ர்க‌ள் ம‌க்க‌ளுக்காக‌ சிந்த‌னை செய்யாம‌ல், செய‌ல்ப‌டாம‌ல், ஒன்று சேராத‌வ‌ர்க‌ள் என்ப‌தை ம‌க்க‌ள் அறிய‌ வேண்டும்

அன்றாட‌ வாழ்வின் அவ‌ல‌நிலையும் இன்றைய‌, எதிர்கால‌‌ ச‌முதாய‌த்தைப்ப‌ற்றியும், ம‌க்க‌ளின் துய‌ர‌ங்க‌ள் என்ன‌வென்றே அறியாத மூட‌ர்க‌ளும் ஆட்சியைப் பிடிக்க‌த் துடிக்கின்ற‌ன‌ர். அதாவ‌து சிறுவ‌ய‌தில் சைக்கிள் ஓட்ட‌ எல்லோருக்கும் ஆசை, அத‌ன் பிற‌கு யாரையாவ‌து பின்னே அமர‌வைத்து ஓட்டிச்செல்ல‌ ஆசை. ஓட்டுப‌வ‌னுக்கு உற்சாக‌மாக‌த்தான் இருக்கும், அமர்ந்துகொண்டிருப்ப‌வ‌ர்க்கும் சாலையில் செல்ப‌வ‌ருக்கும் தான் தெரியும் அது எவ்வள‌வு கொடுமை என்று. அது போல‌த்தான் இருக்கிற‌து இவ‌ர்க‌ளின் துடிப்பு.

முர‌ண்பாடுக‌ளே முக‌ங்க‌ளாய் வாழும் சொல்லுக்கும் செய‌லுக்கும் ஒற்றுமையில்லா அர‌சிய‌ல்வாதிக‌ளும், அதிகார‌ வ‌ர்க்க‌ங்க‌ளும் இங்கே ந‌டத்திக்கொண்டிருக்கும் இர‌ட்டை ஆட்சி முறையில் ம‌க்க‌ளின் முன்னேற்றம் கீழ்க்காணும் இந்த அவ‌லம் தான்.....

  1. துரோகிக‌ளாலும், எதிரிக‌ளாலும் உறிஞ்ச‌ப்ப‌ட்ட‌ சாமான்ய‌ ம‌க்க‌ளின் அன்றாட‌ வாழ்வே பெரும் போராட்ட‌மாய் இருக்கும் வேளையில் உண்மைக‌ளை ம‌றைத்து (மறந்து) விட்ட‌ கார‌ண‌த்தினால் ந‌ம் போராடும் உண‌ர்வும் ம‌ழுங்க‌டிக்க‌ப்ப‌டுகிற‌து.
  2. க‌லாச்சார‌ம் கைமாறிக்கொண்டு இருப்ப‌தால் ஏகாதிபத்தியத்தின் வெகுமதியாய் எல்லாவ‌ற்றிற்க்கும் ஒரு நாளை ஒதுக்கிவிட்டோம், அந்நாளில் ம‌ட்டும் அரைகுறையாய் நினைவுப‌டுத்திக்கொண்டு பிற‌கு அப்ப‌டியே விட்டுவிடுகிறோம்.
  3. ஆடை இல்லாத‌வ‌ன் அரைம‌னித‌ன் என்பார்க‌ள், உண்மையில் வ‌ர‌லாறு அறியாத‌வ‌ன் அரை ம‌னித‌ன். சாதியையும், சினிமா க‌ழிச‌டைக‌ளையும், இர‌த்தத்தில் க‌ல‌ந்துகொள்ப‌வ‌ர்க‌ள் மூட‌ர்க‌ளாய் இச்சமுதாயத்தில் முளைத்து வ‌ருகின்ற‌ன‌ர்.
  4. போலிஅரசியல், ஆன்மீகம், ஆடம்பரம், கிரிக்கெட், சுயநலம், சினிமா கழிசடைகள் போன்ற போதைகளில் மூழ்கித்திளைக்கும் இளையசமுதாயத்தின் அக்கறையும் நிலையும் கூட கவலைக்கிடம் தான்

புதிய கலாச்சாரம் நவம்பர் 2006ல் வெளிவந்த கட்டுரை இது. அவசியம் கருதி இங்கே பதிக்கிறேன். படிக்கும் அனைவரும் தங்கள் மறுமொழியை பதிவு செய்யவேண்டும், எழுத்தால் மட்டுமல்ல உங்கள் செயலாலும்.


மறுகாலனியாதிக்கம்:தியாகம் கேட்கிறது..........உங்கள் மறுமொழி என்ன?

நிகழ்காலத்தை கூர்ந்து கவனியுங்கள். கடந்த காலம் உங்கள் கண்முன் தெரியும். இதோ, காலனியாக்கத்தின் வரலாறு நம் கண்முன்னே விரிகிறது. இன்று க‌ட‌ன் சுமை தாளாம‌ல் விவ‌சாயிக‌ள் செய்து கொள்ளும் த‌ற்கொலை என்ப‌து அன்று பிரிட்டீஷ் ஆட்சி இந்தியாவுக்கு வழங்கிய 34 பஞ்சங்களின் மறுபதிப்பு.

"வட இந்தியாவின் சமவெளிகள் இந்திய நெசவாளர்களின் எலும்புகளால் வெளுக்கப்படுகின்றன" என்று 1830களின் கோரச்சித்திரத்தை பதிவு செய்தான் பெண்டிங் பிரபு.

இன்று அவர்களுடைய தறிகள் விறகாகி எரிந்து அடங்கியும் விட்டன.

வரிக்கொடுமையால் விவசாயத்தை துறந்து, வயிற்றுப்பாட்டுக்காக ஆங்கில ராணுவத்தில் சிப்பாயாகச் சேர்ந்து, தம் சொந்த மக்களை வேட்டையாடும் கூலிப்படையாக மறினார்கள் அன்றைய மக்கள்.

இன்று ஈராக்கில் அமெரிக்கா வழங்கும் கூலிப்படை வேலைவாய்ப்புக்கு கூட்ட‌ம் அலை மோதுகிற‌து.

தென் ஆப்பிரிக்கா, இல‌ங்கை, ம‌லேயா, ஃபிஜி என‌ எல்லாத்திசைக‌ளிலும் ம‌க்க‌ளை கொத்த‌டிமைக‌ளாக‌ க‌ப்ப‌லேற்றிய காலனியாதிக்க கால‌ம் மாறிவிட்ட‌து.

இன்று ப‌ட்டினியிலிருந்து பிழைக்க‌ கொத்த‌டிமைக‌ள் வ‌ளைகுடாவுக்கும், தென்கிழ‌க்காசிய‌ நாடுக‌ளுக்கும் தாமே விமான‌மேறிச்செல்கிறார்க‌ள்.

கும்பினிக்கார‌ர்க‌ள் த‌ம் வ‌ணிக‌த்துக்காக‌ விலை கொடுத்து வாங்கிய‌ சென்னை, மும்பை, க‌ல்க‌த்தா போன்ற‌ ப‌குதிக‌ள் அன்று கால‌னியாதிக்க‌த்தின் கொத்த‌ள‌ங்க‌ளாகின‌.

இன்று ம‌றுகால‌னியாதிக்க‌த்தின் த‌ள‌ப்ப‌குதிக‌ளாக‌ சிற‌ப்புப் பொருளாதார‌ ம‌ண்ட‌ல‌ங்க‌ளை அர‌சே நிறுவிக்கொடுக்கிற‌து.

அன்று த‌ன் அர‌ண்ம‌ணைக்க‌த‌வுக்கு வெளியிலுள்ள‌ சாம்ராஜிய‌ம் அனைத்தையும் வெள்ளைய‌னுக்கு எழுதிக்கொடுத்த தஞ்சை மன்னன் ச‌ர‌போஜி, அத‌ற்கு ம‌க்க‌ளின் ஒப்புத‌லை பெற‌வேண்டிய‌ தேவை இருக்க‌வில்லை. என‌வே தான் அவ‌னை துரோகி என்று எளிதில் அடையாள‌ம் காண‌முடிகிற‌து.

இன்று ம‌றுகால‌னியாக்க‌த்தை ம‌க்க‌ளுடைய‌ ஒப்புத‌லோடு அம‌ல் ப‌டுத்த‌ வேண்டியிருப்ப‌தால், துரோக‌ம் என்ற‌ சொல்லை முன்னேற்ற‌ம் என்ப‌தாக‌ மொழிமாற்ற‌ம் செய்திருக்கிறார்க‌ள் ச‌ர‌போஜியின் வாரிசுக‌ள்.

தன்ந‌‌ல‌னையே பொது ந‌ல‌னாக‌க் காட்டும் இந்த‌ வித்தையில் ப‌டித்த‌ வ‌ர்க்க‌த்தை ந‌ன்றாக‌வே ப‌யிற்றுவித்திருக்கிற‌து, இந்திய‌ ஆளும் வ‌ர்க்க‌ம். என‌வே தான், பிரிட்டீஷ் ஆட்சி இந்தியாவுக்குச் செய்த‌ ந‌ன்மைக‌ளுக்காக‌ ல‌ண்ட‌னுக்கு சென்று ந‌ன்றி கூறிய‌ ம‌ன்மோக‌ன்சிங்கை யாரும் காரி உமிழ‌வில்லை.

"இன்னொரு 200 ஆண்டு கால‌ம் வ‌ணிக‌ம் செய்ய‌ வாருங்க‌ள்" என்று ஐரோப்பிய‌ முத‌லாளிக‌ளை பாக்கு வைத்து அழைத்த ப.சிதம்பரம் துரோகி என்று அடையாளம் காணப்படவுமில்லை.

பதவிக்கும் பவிசுக்கும் ஆசைப்பட்டு ஆங்கிலேயருக்கு சேவகம் செய்தவர்களை அன்று 'ஈனப்பிரவிகள்' என்று இகழ்ந்தான் சின்ன மருது. இன்று பன்னாட்டுக்கம்பனிகளின் பதவிகளில் அமர்ந்து பெற்ற மண்ணை விலை பேசும் வித்தகர்களைத்தான் நாட்டின் பெருமையை உயர்த்தும் "ஞானப்பிரவிகள்' என்று கொண்டாடுகிறது ஆளும் வர்க்கம்.

‌க‌ல்விய‌றிவும் வரலா‌ற்றறிவும் பெற்றிராத பரிதபத்துக்குறிய 18ம் நூற்றாண்டின் மக்களல்ல நாம். இன்றைய மறுகாலனியாதிக்கம் அன்றைய காலனியாதிக்கத்தின் கோரமான மறுபதிப்பாக இருந்த போதிலும், அதனை ஒப்பிட்டு புரிந்து கொள்வதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகள் கண்முன்னே குவிந்த போதிலும் நமது வரலாற்றுணர்வு நமத்துக்கிடக்கிறது.

சொரணையின்றி அடிமைத்தனத்தை தெரிவு செய்துகொள்வதில் அவலம் ஏதும் இல்லை. எதிர்த்துப் போராட அஞ்சவும் முடியாத‌‌ கோழைத்த‌ன‌ம் கைய‌று நிலையும் இல்லை.

அதோ, தூக்கு மேடையை எதிர்நோக்கி காத்திருக்கிறான் ப‌க‌த்சிங். த‌ன்னை விடுவிப்ப‌த‌ற்காக‌ ஆங்கிலேய‌ அர‌சிட‌ம் க‌ருணை ம‌னுப்போட்ட‌ தந்தையை "வேறு யாரும் இதை செய்திருந்தால் துரோகி என்றே நான் கூறியிருப்பேன்" என்று கோப‌ம் தெரிக்க‌ க‌ண்டிக்கிறான்.

மார்பில் குருதி கொப்ப‌ளிக்க‌ க‌ள‌த்தில் ச‌ரின்து கிட‌க்கிறான் திப்பு. "மன்னா யாரேனும் ஒரு பிரிட்டீஷ் அதிகாரியிடம் சரணடைந்து உயிர் பிழைத்து விடலாம்" கூறிய‌ த‌ன் ப‌ணியாளை "முட்டாள் வாயை மூடு" என்று எச்ச‌ரிக்கிறான்.

குண்ட‌டிப‌ட்டு, ம‌க‌ன்க‌ள், பேர‌ன்க‌ள், ச‌க‌ வீர‌ர்க‌ள்..... என‌ நூற்றுக்க‌ண‌க்கானோருட‌ன் தூக்குக்காக‌ காத்திருக்கிறான் சின்ன‌ ம‌ருது. "சமாதானம் பேசலாம்" என ஆசை காட்டுகிறான் துரோகி கௌரி வல்லப உடையத்தேவன். தனது குடிவழியே தூக்கில் தொங்கப்போகும் காட்சி ம‌ன‌க்க‌ண்ணில் தெரிந்தும், அந்த‌ துரோகியின் முக‌த்தில் காரி உமிழ்கிறான் சின்ன‌ ம‌ருது.

கைக‌ளை பின்புற‌ம் பிணைத்து க‌ட்ட‌பொம்ம‌னை தூக்குமேடையை நோக்கி இழுத்துச்செல்கிறார்கள் கும்பினிச் சிப்பாய்கள். சுற்றி நிற்கும் பாளையக்காரர்கள் மீது ஏளனமும் வெறுப்பும் கலந்த பார்வையை வீசுகிறான் கட்டபொம்மன். த‌லை தொங்கிச் சரிந்த‌ பின்ன‌ரும் க‌ட்ட‌பொம்ம‌னின் விழிக‌ள் ச‌ரிய‌வில்லை.

இரண்டு நூற்றாண்டுக‌ள் கடந்த‌ பின்ன‌ரும் உறைன்து நிற்கிற‌து அவ‌னுடைய‌ ஏள‌ன‌ப்பார்வை அந்தப் பார்வைக்கு இலக்காவதற்கு இன்று பாளையக்காரர்கள் எவருமில்லை. நாம் தாம் இருக்கிறோம். கண் கலங்கித் தலை குனிகிறோம்.

பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 249வது பிறந்த நாள் விழா நடந்தது. ஆனால் அதில் கலந்து கொண்டால் பதவி பறி போகும் என்ற மூட நம்பிக்கையால் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் இதில் கலந்து கொள்ளவில்லை. முற்போக்கு சிந்தனையாய் தங்களை முன்னிருத்தும் அர‌சின் அமைச்ச‌ர்க‌ள் இப்ப‌டியென்றால் இவ‌ர்க‌ளின் த‌லைமையும் அப்ப‌டித்தானே.

அடுக்குமொழியிலும், அழ‌கு த‌மிழிலும் ம‌க்க‌ளை ம‌ய‌க்கி த‌மிழே உருவாய் க‌லைஞ‌ர் என‌ க‌தைய‌ளக்க‌ப்ப‌டுப‌வ‌ர் அங்கே ஆஸ்திரேலியாவில் ஒரு குட்டி திமிங்கில‌ம் தாயை பிரிந்து த‌விப்ப‌தை த‌விப்போடு க‌விதையாக்கி அதை ம‌க்க‌ளுக்கு சொல்லி த‌ன் ம‌னித‌த்தை சொல்லுப‌வ‌ர், இங்கே த‌மிழ‌ன் த‌ன் தாயாம் த‌மிழ் இல்லாம‌ல் த‌விப்பதை ஒரு பொருட்டாய் கொள்ளாம‌ல் போகும் இவ‌ர்க‌ளின் நீலிக்க‌ண்ணீரை அறியாம‌ல் விய‌ந்து கொண்டிருக்கும் ம‌க்க‌ளே!... நீங்க‌ள் க‌வ‌ன‌மாய் இல்லாத‌ போது உங்க‌ளின் ஒரே கோவ‌ண‌மும் க‌ள‌வாடிக் கொள்வாரே.

62வ‌து சுதந்திர‌த்தை கொண்டாட‌ செல்ப‌வ‌ர்க‌ள் த‌ன்னிறைவு அடைந்த‌தாக‌ ஏதேனும் ஒரு துறையையாவ‌து சொல்ல‌ முடியுமா? மனிதனும் ம‌ண்ணும் ம‌ல‌டாகிப்போன‌து தான் மிச்ச‌ம். பள்ளிகள் குறைவு, அதிலும் மாணவர் குறைவு, இருக்கும் மாணவர்க்கும் தமிழ் நாட்டில் தாய்மொழியாம் தமிழுக்கு ஆசிரியர் குறைவு, இதெல்லாம் தமிழே உருவானவர் என்று கதையளப்பவர் ஆட்சியில் நடப்பது, நாம் எங்கிருந்து காண‌ப்போவ‌து நிறைவு. வ‌ர‌லாறுக‌ளை இருட்ட‌டிப்பு செய்வ‌தையும் துரோகிக‌ளின் வாரிசாக‌ ம‌ட்டுமே விரும்பும் அர‌சுக‌ள் இருக்கும் வ‌ரை நாடு எந்த‌த் துறையிலும் தன்னிறைவு பெறாது.

தியாகமும் துரோகமும் கலந்தது கடந்த வரலாறு மட்டுமல்ல, நிகழும் வரலாறிலும் தான். கூடவே அலட்சியமும் சேர்ந்து விட்டது. எல்லா வேலைகளையும் பிரித்து சாதி உருவாக்கிய பார்ப்பணத்திமிர், அதன் பாதிப்பு சாமன்ய மக்களிடமும் தென்படுவதே இங்கு அவலத்தின் உச்சகட்டம். எட்டயபுரம் ராஜா இன்றளவும் அரண்மணையில் வாழ்வதும், கட்டப்பொம்மனின் வாரிசுகள் தொகுப்பு வீடுகள் கேட்டு மனுப்போடுவதும், தியாகத்தின் சந்ததிகள் பெருமைக்கும் வெளிப்படாமல் பொருளாதார சுழலில் சிக்கியும், துரோகத்தின் சந்ததிகள் இன்றும் பெருமைப்படுத்தவும் சுக வாழ்வும் வாழும் இழி நிலையை நம் கண் முன்னே கண்டபிறகும் ஒரு போராடத்தயங்கும் மக்களின் விடியல் சினிமாவில் வருவதை போல வெறும் இரண்டு மணி நேரத்தில் உங்களின் எல்லாப் பிரச்சனைகளையும் தனி ஒரு ஆளாகத் தீர்த்து வைப்பவராக வேறு எவராவது வருவாரென போலி முகங்களை நம்பிக்கொண்டிருக்காதீர்கள்.

எனவே உணர்வீர் நண்பர்களே!

சுதந்திரம் என்பது!

சிறகோடு இருப்பது மட்டுமல்ல..

கூண்டில் அடைபடாமலும் இருப்பதே.

ந‌ம‌க்கான‌ போராட்ட‌ம் கையில் எடுக்காம‌ல் ந‌ம் சுத‌ந்திர‌மும் ந‌ம‌க்கில்லை.

வெள்ளி, ஆகஸ்ட் 08, 2008

புவி வெப்பமாதலும், அதன் அரசியலும்...

புவி சூடேற்றம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கின்ற போதும், அதன் சரியான உண்மைப்புரிதல் பெரும்பாலானோருக்கு இல்லைதான். வித்தியாசம் என்கிற பெயரில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (ஏகாதிபத்திய அடிவருடிகள், கைகூலிகல்) பிரச்சார நிகழ்ச்சி நடத்துகிற‌து. புவி வெப்பமாதலைத்தடுக்க எக்ஸ்னோரா நிறுவனம்(NGO) "88888" என்ற விழிப்புணர்வு பிரச்சார‌ம் செய்கிறது. அதாவது 2008 ம் ஆண்டு, 8-வது மாதம், 8-ம் தேதி, 8-மணிக்கு, 8 நிமிடங்களைக் குறிக்கும். அதன்படி இன்று இரவு 8 மணியிலிருந்து 8 நிமிடங்களுக்கு மின்சார பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும்.

குறைந்த மின்னழுத்தமும், முன்னறிவிப்பின்றி வரும் (ஆர்க்காட்டாரும்) மின்தடையும் நம‌து அன்றாட வாழ்வை எந்த அளவிற்கு பாதிப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. வீடுகளும், சிறு தொழிலாளர்களும் சொல்லமுடியாத அளவிற்கு தின‌மும் அவதிப்படுகின்றனர். இதில் இந்த 8 நிமிட மின்பயன்பாடு தவிர்ப்பு எந்த அளவிற்கு புரிதலை தரப்போகிறது.

நமது நாட்டின் மொத்த எரிபொருள் தேவையும் அதன் பாதிப்பையும் விட அமெரிக்காவின் சில மாகாணங்களின் கூட்டுத்தேவையும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பும் உலகத்திற்கு மிகமிக அதிகம். மொத்த அமெரிக்காவையும் கணக்கெடுத்தால் இந்த பிரச்சனைக்கு மூல காரணம் யாரல் என்பது தெரியும். அங்கு போய் இந்த அறிவுஜீவிகள் பேசமுடியுமா? முடியாது. ஏனென்றால் இவர்கள் அங்கிருந்து கூலி வாங்கிக்கொண்டுதான் உலகத்தின் கையை கொள்ள அறிவுரை சொல்கிறார்கள். அமெரிக்கா போன்ற கனவான்கள் சொகுசாய் வாழ நம்மை சாகச்சொல்லி நேரடியாகவே பேச ஆரம்பித்து விட்ட மத்திய மாநில அரசைப்போலவே இவர்களும்.

அமெரிக்க ஏகாதிபத்திய திமிர் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் மிகமோசமான படுகொலையை நிகழ்த்தும் அதேவேளையில் "மனிதநேய உதவி" என்ற பெயரில், மனிதநேயமற்ற குண்டுவீச்சுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொட்டலம் வழங்கியது. அமெரிக்கப் பேச்சுக்கெல்லாம் "ஆமாம்" வேலை பார்க்கும் ஐ.நா சபையும் உதவும் அமைப்புகள் மூலம் நீர், உணவு, மருந்து போன்றவற்றை அனுப்புகிறது. பெரிய அணைகளைக்கட்டுவதன் மூலம் லட்சக்கணக்கான மக்களை, அவர்களின் வீடு நிலங்களிலிருந்து வெளியேற்றுகின்ற உலக வங்கி, இடம் பெயர்ந்த மக்களுக்கு நஷ்டஈடு பெறவும், வீடுகள் கட்டித்தரவும் போராடும் அமைப்பை உருவாக்குகிறது. திட்டங்கள் என்கிற பெயரில் காட்டுமரங்களை வீழ்த்துவதன் மூலம் சுற்றுசுழலைச் சீரழிக்கும் ஏகாதிபத்திய அமைப்புகள்தான் காடுகளைப் பராமரிக்க வேண்டுகின்ற தன்னார்வக் குழுக்களையும் உருவாக்குகிறார்கள். சுரண்டும் வர்க்கத்தின் த‌ந்திரமான இவற்றை நாம் ஆராய்ந்தோமானால் அவை ஒடுக்குமுறையையும் சீர்திருத்தப்பாதையையும் ஒரே நேரத்தில் கையாள்வதை நாம் காண முடியும். இதன் முக்கிய நோக்கம் ஒடுக்கப்பட்ட மக்களை அரசியலற்றவர்களாகவும் அணிதிரளாதவர்களாகவும் பாதுகாப்பதே ஆகும். ஏகாதிப‌த்திய‌வாதிக‌ள், போர‌ட்ட‌ம் ந‌ட‌த்தும் ம‌க்க‌ளிடையே அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளை உருவாக்குகிறார்க‌ள். ம‌க்க‌ளின் கோப‌த்தைத் த‌ணிக்கின்ற‌ "பாதுகாப்பு வால்வாக‌" அந்த‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் செய‌ல்ப‌ட‌வேண்டும் என்ப‌துதான் அவ‌ர்க‌ளின் நோக்க‌மாகும். உதார‌ண‌மாக‌, 1885-ம் ஆண்டு பிரிட்டிஷ் கால‌னிய‌வாதிக‌ளால் காங்கிர‌சுக் க‌ட்சி உருவாக்க‌ப்ப‌ட்ட‌து இவ்வாறுதான்.



எனவே இந்த அரசு சார அமைப்புகள்(NGO) ஒடுக்கப்பட்ட மக்களிடையே, முதலாளித்துவத்திற்கு மாற்று ஏதுமில்லை என்ற போலி நம்பிக்கையைப் புகுத்தவும், முதலாளித்துவம் இறுதி வெற்றியைப் பெற்றுவிட்டதாகவும், கம்யூனிசம் இறந்து விட்டதாகவும், மார்க்ஸியம் காலாவதியாகிவிட்டதாகவும் சித்தரிக்கவே அவை முய‌ல்கின்றன. இந்த NGO-க்கள் தம்மை லாப நோக்கமற்ற, தன்னலமற்ற சமூகப்பணியில் ஈடுபடும் அமைப்புகளாகவும் காட்டிக்கொண்டு ஒரு மாயையை உருவாக்கி ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு ஏற்ற பாதையை வகுத்துத் தருகின்றன. எனவே இந்த கைக்கூலி பச்சோந்திகளின் உண்மை நிலையினை உணர்ந்தரிவீர் நண்பர்களே....!


"யார் வீட்டு எழவோ, பாய் போட்டு அழுவு" ங்கிற மாதிரி மிகக்குறைந்தபட்ச மனிதத்தோடு நாட்டில் எல்லோருக்கும் ஒருவேளை உணவாவது கிடைத்ததா என்பதறியாத அறிவுஜீவி அரசியல்வா(வியா)திகள் ஆயுதம் வாங்கவும், அதனைத்தயாரிக்கவும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அதிக நிதி ஒதுக்கும் மானங்கெட்ட அரசுக்கும் இந்த மாதிரியான அரசு சார அமைப்புக்கும் கொஞ்சமும் வித்தியாசமில்லை. எனவே, முதலாளித்துவச் சொத்துடமையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, அதன் சமூக விரோதத் தன்மையை அம்பலப்படுத்தாத வரை, இயற்கையையே உடைமையாக்கிக் கொள்ள எத்தனிக்கும் இந்த ஏகாதிபத்தியச் சதியை நாம் முறியடிக்கவியலாது.

வியாழன், ஜூலை 24, 2008

விடியாமல் முடியாது..

ஏ.. சமூகமே எங்கே செல்கிறாய்?
பெயர்ப்பலகை இல்லாத பேருந்து போல‌
சேறுமிடம் அறியாமல் செல்லும் நீயும்,
இலக்கில்லாமல் பாயும் அம்பு போல‌
அர்த்தமற்று போகும் உன் வாழ்வும்.
எதிரிகளாலும், துரோகிகளாலும்
உன்னைச் சுற்றி எழுப்பப்பட்ட சவக்குழிகள்
உனக்காக என்றபோதும் ஏனிந்த அமைதி.
அடிப்படை உரிமைகளே பறிக்கப்பட்டாலும்
ஆன்மீகச் சிந்தனை வருவதேன்?
அடக்குமுறைகளே அரசின் முகமாயின்
உதாவாத அஹிம்சை ஏன்?
ஒடுக்கப்பட்ட மக்களே எங்கு காணினும்
நம்மில் ஒற்றுமை இல்லையே ஏன்?
ஒட்டுமொத்த உலகமே...
விவசாயி, தொழிலாளியால் இயங்கும் போது
ஒன்றுசேர்ந்து போராட மறுப்பதேன்?
போராட தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
நம்மில் ஒருவன் நிச்சயம் இறக்கிறான்.
போகிற உயிர் போரட்ட‌த்தில்தான் போகட்டுமே...!
வாழ்வாவ‌து முழுமைபெறும்.
அடிப்படை தேவைகள்கூட பூர்த்தியாகாத சமூகத்தின்
அவலநிலை சொல்லித்தெரிய அவசியமில்லை.
இருந்த‌போதும்
வேலையின்மை, விலைவாசி உய‌ர்வு, ப‌ண‌வீக்க‌மென‌
உயிர்கொல்லிக‌ளை ச‌மூக‌த்தில் ஊடுருவ விட்டு
வேடிக்கைப்பார்க்கும் "உலகின் மிகப்பெரிய‌" ஜ‌ன‌நாய‌க‌ம்.

அவலங்கள் சில‌....

சிறிய‌, பெரிய‌ க‌ட்டுமான‌ நிறுவ‌ன‌ங்க‌ள் த‌ங்க‌ளின் கூலித்தொழிலாள‌ர் ப‌ற்றாக்குறையால் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌வும் அத‌ற்கு வெளிநாட்டிலிருந்து அழைத்துவ‌ர‌ மையஅர‌சிட‌ம் ம‌னு கொடுத்துள்ள‌ன‌ர்.
சொந்த‌ நாட்டில் அக‌திக‌ளாய் மாநில‌ம் கடந்து அடிப்ப‌டை வ‌ச‌தி இல்லாம‌ல் சாப்பாட்டிற்கே அல்ல‌ல்ப‌டும் கூலித்தொழிலாள‌ர்க‌ளின் நியாய‌மான‌ எதிர்பார்ப்பில் ச‌ரியான‌ கூலியும், ஓய்வும் கிடைத்தால் இங்குள்ள‌ ம‌க்க‌ள்ச‌க்தி போதாதா என்ன‌?

சமச்சீர்கல்வி இல்லாமல் காசுக்கேத்த கல்வியென அடிப்படைகல்விக்கு புதுஅத்தியாயம் எழுதிய இந்த பணநாயகத்தில் மாணவர்கள்மட்டுமா, ஆசிரியர்களும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனரே.
அரசும், அதிகாரிகளும் போட்ட துப்புகெட்ட சட்டமான மாவட்ட வாரியான பதிவுமூப்பின்படி நியமனம் என்பதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பட்டயப்படிப்பு முடித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, கடந்த ஏழுமுறை பணிநியமனம் அனுப்பியும் குறிப்பிட்டு கன்னியாகுமரியில் ஒருவருக்குகூட வேலைகிடைக்கவில்லை.
தென்மாவட்டத்தில் உள்ள பயிற்சிபள்ளிகளில் ஒவ்வொன்றிலும் 50 ஆண் பெண் என மொத்தமாய் அங்கு 2000 பேர் வெளிவந்தும், சமூகத்தின் தேவை இருந்தும் தேவையில்லாத சட்டத்தின் அடிப்படையில் வீணடிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர் துயரம் மீளாத்துயராய், திமிர்ப்பிடித்த இலங்கை கடற்படையினரால் சுடப்படும்போது அரசின் செயல்பாடும், நிலைப்பாடும் எப்படி உள்ளது.
ஒரு குடும்பத்தின் தலைவன் இப்படி திடீரென இறந்துபோனால் அக்குடும்பம் அடையும் வாழ்நாள் துயரம் எவ்வளவு பணத்தில் (அ) எந்த வார்த்தையில் சரிகட்ட முனைகிறார்கள்.


போலிஅரசியல், ஆன்மீகம், ஆடம்பரம், கிரிக்கெட், சுயநலம், சினிமா கழிசடைகள் போன்ற போதைகளில் மூழ்கித்திளைக்கும் இளையசமுதாயத்தின் அக்கறையும் நிலையும் கூட கவலைக்கிடம் தான்.

பணநாயக அரசியலில் மூத்தவர்களை முந்தும் இளைஞர்கள். இந்தியாவின் மேகாலயாவின் இளம் MP-யான அகதா(27) நேற்று நடந்த நாடாளுமன்ற கூத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள வந்தவர், "அணுசக்தி ஒப்பந்தம் பற்றி என்னவென்றே தனக்கு தெரியாது, இருந்தும் நான் ஆதரிக்கிறேன்" என்கிறார். இளைஞர்களாக உள்ள ராகுல் போன்றோரின் செயல்பாடுகள் விரும்பத்தக்கதாகவும், அதனாலேயே தானும் ஈர்க்கப்படுவதாக கூறி(கூட்டத்தில் கோவிந்தா) தனது நிலையை வெளிப்படுத்தினார்.

எல்லா கூத்தும் அரங்கேறிய அந்த பன்றிக்கூடத்தில் நேற்று இந்திய ஜன(பண)நாயகத்தின் கோவணம் அவிழ்த்துக்காட்டப்பட்டது. MP-க்களின் சந்தைவிலை நேற்று வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வின்னை முட்டியது. நம்பிய மக்களை நாசம் செய்த MP-க்கள் நல்ல விலைக்கு வித்துக்கொண்டதுடன் தங்களை ஒரு தேசிய போராளியாக காட்டிக்கொண்டனர். இந்த வீணர்களின் வெற்றி விமர்சனமாய் ராகுல்காந்தி பேசும்போது, ராஜிவ்காந்தி, நரசிம்மராவ் இவர்களின் சீர்திருத்த‌ப்பாதையில் பிரதமரின் பணி தொடருமென கூக்குரலிட்டார். கட்சிகள் மாறி ஓட்டுப்போட்டதும், கொள்கைகள் முரண்பாடானதும், பணமே அனைத்திற்கும் தலைமை வகிப்பதும் உலகமே நேரடியாக பார்த்ததில் இந்திய ஜன(பண‌)நாயகம் நிர்வாணமாய் போஸ் கொடுத்தது.

541 பன்றிகளும் மூன்று பிரிவாக பிரிந்து மாறி யோக்கியசிகாமணிகளாய் உள்கூட்டு விபசாரத்தில் தங்களின் நாடகத்தை அரங்கேற்றி மக்கள் அனைவரையும் முட்டாளாக்கினார்கள் (அப்பவாவது நமக்கு கோவம் வ‌ந்து உருப்படியா எதையாவது செய்யமாட்டோமா என்பதாய் கூட நாம் எடுத்துக்கொண்டிருக்கலாம்). ஆனாலும் Match Fixing போல நம்பிக்கை ஓட்டெடுப்பின் முடிவை அறிவிப்பதற்கு முன்னதாகவே அமெரிக்க ஏகாதிபத்திய திமிர் வெளிக்கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பின் வெற்றிக்காக‌ மன்மோகன்சிங்‍கை வாழ்த்தியது. எரியிர கொள்ளியில தலைவிட்டது போல, தேவையை காரணம் காட்டி தேவையில்லாத திட்டத்தில் மக்களின் வரிப்பணம் அம்போவென போகிறது. மக்கள் விழிப்பார்களா?

110 கோடி மக்களில் 80 விழுக்காடு மக்களின் தினசரி வருமானம் 20 ரூபாய்க்கும் குறைவென அரசின் குறிப்பு சொல்கிறது. உலகத்துக்கே சோறுபோட்ட விவசாயிக்கு சோறு இல்லையென கைவிரிக்கும் கைய்யாலாகாத அரசு, பொறுப்புகளை கைகழுவும் பொறுப்பில்லாத அரசு, டாஸ்மார்க் மட்டுமே நிர்வாகம் பன்னதெரிந்த அரசு, சமீப காலத்தில் பொருளாதாரத்திலும் விவசாயத்திலும் தன்னிறைவு பெற்றதாக கூறும் தன்மானமில்லாத இந்த அடிமைவல்லரசு கடந்த 10 ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாயிகளை ஈவிரக்கமின்றி திட்டமிட்டே கொலைசெய்துள்ளது. 15கோடி ஹெக்டேர் நிலம், வருடத்தில் 220 நாள் சூரியஒளி, 880 மி.மீ மழை,மிகப்பெரிய மனிதவளம் இருந்தும் அரசியல் ரீதியில் சரியான கொள்கையும் மன உறுதியும் இல்லாததால் பசி, பஞ்சம், விலைவாசி உயர்வு, பணவிக்கம்.............எல்லாம்.

பதுக்கல், கள்ளசந்தை, முன்பேரவணிகம்.....முதலானவற்றை இரும்புக்கரம்கொண்டு அடக்கவும், தீர்வாய் எல்லோருக்குமான பொதுவிநியோகமுறையை நெறிப்படுத்தவும் ஒன்றிணைந்துப் போராடாமல் தானாய்மாறும் என்பதைப்போல் வாய்ப்பேதும் இருப்பதாய் உறங்கிக்கொண்டே கனவுகாணாதீர்கள்.

வெள்ளி, ஜூலை 04, 2008

க‌ழுத்தை நெறிக்கும் விலைவாசி, கால‌ தாம‌த‌மின்றி கொஞ்சம் யோசி!


தற்ப்போது நிலவிக்கொண்டிருக்கும் நிதி நெருக்கடி, விலைவாசி உயர்வு, பண வீக்கம் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வர இயலாமல் இருக்கும் வக்கற்ற மத்திய மாநில அரசுகளின் தெனாவட்டுப்போக்கும், பொய்யான வதந்தி பரப்பும் கீழ்த்தரமான‌ செயலும், மக்களின் விழிப்புனர்வை விரும்பாமல் அவர்களை திசை திருப்பும், அவர்களின் புத்தியை மழுங்கடிக்கும் வேலையைத்தான் இன்றைய நாளில் அனைத்து ஊடகங்களும் (All TV Channels, Daily, Weekly, Monthly Magazines), செய்து கொண்டிருக்கின்றன. முழுவதும் வர்த்தகத்தையும் சுயநலத்தையும் அடிப்படையாகக் கொண்ட இவர்களைப்போலவே நம் நாட்டின் எல்லா அரசியல் வியாதிகளும் உங்களுக்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதைப்போலவும் தங்களை காட்டிக்கொள்ளவே சொந்த ஊடகங்களின் மூலமாக வியாபார அடிப்படையில் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கின்றன.

தோழர்களே, ஓவ்வொரு கண்மும் நம்மைச்சுற்றியும் நம் சமுதாயத்தைச் சுற்றியும் பின்னப்படும் சதிவலைகளை கண்டறிந்து களைய வேண்டியது நம் சமுதாய கடமையாகும். தற்போதைய நிலையில் என்ன நடக்கிறது? யாரால் எதனால் நடக்கிறது என்பதறிய வேண்டியதன் அவசியம் உணர்வீர்களாயின் நம் சிந்தனையும் செயலும் ஒன்றுபட்ட புரட்சியினால் நடப்பவை களைந்து நன்மை பயக்க வழிகோலும்.

போலி கம்யூனிஸ்டுகளின் மக்கள் விரோதப்போக்கும், மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ் எனும் பூச்சாண்டி நாடகமும் 'தொலைக்காட்சி மெகா சீரியல்களை' தோற்க்கடித்து வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை கடந்து நடந்து கொண்டிருக்கும் போது அவ்வப்போது வரும் திருப்புமுனைக்காட்சிகள் போல...4-ம் தேதி கெடு விதித்திருப்பதாகவும், அதோடு கூட்டணி உறவை முறித்துக்கொள்வதாகவும் அறிக்கை விட்டுள்ள இந்த போலிகளின் முடிவற்ற நாடகமும், ஒத்திகையும் இவர்கள் எப்போதும் பிழைப்புவாத நடவடிக்கையில் தான் தொடர்ந்து இருப்பார்கள் என்பதில் எள் அளவும் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கும் நிலைப்பாட்டினை சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும் தோழர்களே., விலைவாசி உயர்வும், பணவீக்கமும், பெட்ரோல், டீசல் விலை உயர்வும் அதன் காரணமான லாரிகள் வேலை நிறுத்தமும், அதனால் தொடர்ந்த அத்தியாவசியப்பொருட்கள் தட்டுப்பாடும், அதைப்பயன்படுத்தி லாபம் பார்த்த பதுக்கல்காரர்களும், இவற்றை சரிசெய்ய இயலாத இந்த அடிமை வல்லரசின் பிற்ப்போக்கு நிலைப்பாடும், மக்களின் துயரம் யாராலும் துடைக்கப்பட முடியாமல் போவதையும் கண்கூடாகப்பார்த்த பின்னும் இவை அனைத்திற்கும் நிஜமான மூல காரணமான‌ த‌னியார்ம‌ய‌ம், தாராள‌ம‌ய‌ம், உல‌க‌ம‌ய‌ம் கொள்கைக‌ள் தான் என்ப‌தை அறிவீர்க‌ளா? அறிந்து அடியோடு தூக்கி எறிய‌ ஓர‌ணியாய் திர‌ள்வீர்க‌ளா?

லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள 1.20 லட்சம் வேன்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வேன்கள், கார்கள் வேலை நிறுத்தத்தினால் எத்தனை லட்சம் தொழிலாளர்கள், பள்ளி செல்லும் குழ‌ந்தைகளின் பாதிப்பு, இந்த லாரி ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் மட்டுமின்றி அதை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் பிழைக்கும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை என்னவானது என்பதை சற்று சிந்திக்க வேண்டும் தோழர்களே.

காய்கறிகள், கனிகள், பூ இவைகளின் திடீர் தட்டுப்பாட்டுக்கும் விலையேற்றத்துக்கும் மாற்றுவழி செய்திருப்பதாய் கூக்குரலிடும் அடிமைவல்லரசின் கைகூலி அரசாங்கம் உண்மையில் வெறுமனே வேடிக்கைமட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது. அதற்கு உதாரணம் சென்னை உட்பட பல நகரங்களில் டீசல் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் விற்க்கப்பட்டது. மேலும் சில நகரங்களின் உண்மை நிலைப்பாடுகள்....

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 750 கோழிப்பண்ணைகளில் தினமும் 2.50 கோடி முட்டைகள் தேக்கமும், அவற்றிற்க்கான தீவனத்தட்டுப்பாடும் அங்குள்ள தொழிலாளர்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

ஓசூரில் உள்ள பத்தலப்பள்ளி தக்காளி வியாபாரத்துக்கு பிரபலம். இங்கு 100 டன் தக்காளி தேக்கமடைந்துள்ளது, தினமும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய தக்காளி அழுகி வீணாகும் நிலை உள்ளது.

குன்னூரில் லாரிகள் ஓடாததால் 20 கோடி மதிப்பிலான தேயிலைத்தூள் தேங்கியுள்ளது, மேட்டுப்பாளையத்தில் காய்கறி மண்டியை நம்பி ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கூலித்தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் தங்களின் வருமானத்தை (அதாவது அந்த அரை வயித்துக் கஞ்சிக்கும் வச்சிட்டானுங்க வேட்டு) இழந்துள்ளனர்.

நெல்லையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பீடி அனுப்புவது அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது, பீடி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை பெரிய நிறுவனங்கள் ஸ்டாக் வைத்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால் அங்கு மேலும் நெருக்கடி நிலை உருவாகி உள்ளது.

பரமக்குடி லாரிகள் வேலை நிறுத்தத்தால் பலகோடி ரூபாய் மதிப்பிலான மிளகாய், பருத்தி தேக்கமடைந்துள்ளது. இதன் காரணமாய் இந்த சரக்குகள் கமிஷன் மண்டிகளில் தேங்கியுள்ளன. இந்த நிலையால் அங்குள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள், டிரைவர், க்ளீனர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆந்திரா, ஒரிசாவில் இருந்து திருச்சிக்கு சரக்கு ரயிலில் அரிசி, உரம் வந்துள்ளன. லாரிகள் வேலை நிறுத்தத்தால் இவை இறக்கப்படவில்லை. ரயில் வந்த 9மணி நேரத்துக்குள் சரக்குகளை இறக்காவிட்டால் மணிக்கு ஒரு பெட்டிக்கு ரூ.100 காத்திருப்பு கட்டணம் செலுத்த வேண்டும். இப்படியாக காத்திருக்கும் பெட்டிகளுக்கு தினமும் 3 லட்சத்து 38 ஆயிரத்து 400 ரூபாய் செலுத்தப்படுகிறது.

வர்த்தக சிலிண்டரின் விலையே ஒரு நிலையில்லாத தன்மையாய் இருக்கிறது.
March 2008 - ரூ.1102.65
April 2008 - ரூ.1122.52
May 2008 - ரூ.1093.30
June 2008 - ரூ.1172.30
July 2008 - ரூ.1231.௨0

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் இதே நிலைதான். உதாரணத்துக்கு சில உண்மை நிகழ்வுகளையே உங்கள் முன் வைத்தேன்.
இந்தியாவின் மக்கள்தொகை 112 கோடியில் பெரும்பான்மையானோர் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் உற்ப்பத்தியை வைத்துக்கொண்டு அவர்களையே பட்டினி போடும் நன்றி கெட்ட, விசுவாசமில்லாத, நேர்மையில்லாத சுயநல பாசிச தலைமைக்கு, அவர்களின் உற்பத்தியை பாதுகாக்க கூட வக்கில்லாமல் போனது. மத்திய அரசுக்குச்சொந்தமான Food Corporations of India (FCI) கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் டன் தாணியங்கள் வீணாகியுள்ளன. மீதமுள்ளவற்றை கெடாமல் பாதுகாக்க FCI 242 கோடி செலவிட்டுள்ளது. கெட்டுப்போன தாணியங்களை அகற்ற 2.59 கோடி செலவழித்துள்ளது. இதிலிருந்து இவர்களின் நிர்வாகத்திறனை நன்றாக நாம் அறிந்துகொள்ள முடியும்.


11-வது ஐந்தாண்டுத்திட்டம் குறித்து விவாதிக்கும் அறிவுஜீவிகள் கடந்த 1௦0- ஐந்தாண்டுத்திட்டங்களின் நோக்கமும், அவற்றிற்கு ஒதுக்கீடு செய்த தொகையும், செயல்பாடுகள் குறித்த விளக்கமும் மக்களிடம் ஒளிவு மறைவின்றி நேர்மையாக ஒப்படைக்கவும், விவாதிக்கவும் இங்குள்ள எந்த ஓட்டுப்பொறுக்கி நாய்களுக்கும் தைரியம் கிடையாது. தன்மானமில்லாத தற்குறிகள், சுயநலத்திற்க்காக கொள்கையையும் நம்பிய மக்களை ஏமாத்தும் நயவஞ்சகர்கள். பசியும், பட்டினியும் கோரத்தாண்டவம் ஆடி மக்களை கொன்று குவிக்கும் மிகக்கேவலமான அரசியல் கொள்கைகளை வகுத்து கூறுபோட்டு தாய்நாட்டை அன்னியனுக்காக காவுக்கொடுத்தவர்கள். இவர்களா நம்மை கரை சேர்க்கப்போகிறார்கள். இன்னுமா இவர்களை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். "விடியாமல் முடியாது" என்பது போல நாம் விழிக்காமல் இருக்கும் வரை நமது துயரங்களும் விடியாது. நமது கவலை எப்படியாய் இருந்தாலும் அதை கண்டுகொள்ளாத அல்லது கண்டு கொள்வதுபோல் நடிக்கின்றவர்கள் தான் இங்குள்ள எல்லா ஓட்டுபொறுக்கி கட்சிகளும். தரகுவேலை பார்க்கும் வெட்கம் கெட்ட, மானங்கெட்ட மக்குமோகன் சிங், ச்சித்தம்பரம், அத்துவானி, கர்நாநிதி, செல்வி.செயலலிதா, அவர்களின் கவலையெல்லாம்...அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இடதுசாரி மாமாக்களை எப்படி சமாளிப்பது, காஷ்மீர் அரசை எப்படி காப்பாற்றுவது, மக்களவை, சட்டசபைத்தேர்தலை எப்படி சந்திப்பது போன்ற பிழைப்புவாத அடிப்படையிலேயே தங்களின் அறிய மூளையை செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்
(இதில் எந்த ஓட்டுக்கட்சியும் விதிவிலக்கல்ல).

உலகின் அனைத்து நாடுகளின் பிரச்சனைகளுக்கும் மிகவும் நேரடியான‌ காரணகர்த்தாவாய் விளங்கும் அமெரிக்காவும் (புஷ்) அதன் பின்னணியாய்ச் செயல்படும் பல அமைப்புகளும் உலகத்தை கூறுபோட்டு தின்றுகொண்டிருக்கும் பிணந்திண்ணி கழுகுகள். அந்த கழுகுக‌ளில் ஓன்றுதான் வாஷிங்டனில் இருந்து செயல்படும் World Value Survey. இந்த அமைப்பு இந்திய மக்களிடம் மகிழ்ச்சி அதிகரித்து வருவதாகக்கூறி அறிக்கை வெளியிட்டுள்ளான் அந்த ஆய்வின் தலைமை அதிகாரி ரெனால்ட் இங்கெல்ஹர்ட்.

ஆகவே தாமதம் வேண்டாம், விழித்துக்கொள்வோம்.விரட்டி அடிப்போம் தனியார்மயம், தாராளமயம், உலகம‌யம் என்ற வக்கிரகொள்கைகளையும் அதைபற்றிக்கொண்டிருக்கும் மனித பிசாசுகளையும்.

சனி, ஜூன் 21, 2008

கூலிப்படைகளாய் ஆன‌ போலி கம்யூனிஸ்டுகள்

கம்யூனிசம் அல்லாத எல்லா கொள்கைகளுமே உலகத்தின் எந்த ஒரு நாட்டிலும் அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் என்கிற கோட்பாடே இல்லாமல் தமது பாதையில் பயணிக்கும் போது தங்களின் மக்கள் விரோதப்போக்கை மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்லாமல் சொல்லிவிட்டு மக்களின் எதிரிகளாக நிற்கிறார்கள். மக்களுக்கு எதிரான அனைவரையும் மக்கள் மன்றத்தில் நாம் அம்பலப்படுத்த வேண்டும் என்கிற போதிலும் யாரை முதலில் நிறுத்த வேண்டுமென்ற பார்த்தால்..., எதிரிகளை எதிர்த்து அழிக்க வேண்டுமானால் கொஞ்சம் காலதாமதம் ஆகலாம், ஆனால் துரோகிகளை .....சிறு கணமும் தாமதிக்காமல் அடையாளம் கண்டு மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி சுவடின்றி அழிக்க வேண்டும்.

தோழர்களே...., நீங்கள் நினைப்பது சரிதான். இங்கே நான் துரோகிகள் என்று சொல்வது 100 விழுக்காடு CPM-ஐ தான். CPM என்றைக்கும் புரட்சி செய்யப்போவதில்லை. அது நம்மை விட இந்த போலி கம்யூனிஸ்டுகளோடு கூட்டு சேர்ந்து சாக்கடையில் ஊறிக்கொண்டிருக்கும் எல்லா ஓட்டுபொறுக்கி கும்பலுக்கும் மிக நன்றாக தெரியும். இவர்களின் புரட்சி பற்றி நமக்கு ஏற்கனவே நந்திகிராம், சிங்கூர் மூலமாக நன்கறிந்தோம். இவர்களின் கூட்டாளிகள் விழுப்புரம் மாவட்டம், காரப்பட்டு கிராமத்தில் மிகவும் கேவலமான செயலை ஊரறிய அரங்கேற்றி இருக்கிறார்கள்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி (வி.வி.மு) தமிழகம் முழுவதும் இயங்கி விவசாயிகளை ஒரு அமைப்பாக்கி வருகிறது. எமது அமைப்புகள் முன்வைக்கும் நேர்மையான துணிவான விமர்சனங்களை சகிக்க முடியாமல், பதில் சொல்லவும் இயலாத, ஒரு வக்கற்ற வாழ்வு வாழும் இந்த போலி கம்யூனிஸ்டுகள்...........ஒரு பொறுக்கி, ரௌடி போல தங்கள் தாதாயிசத்தை ஆயுதம் கொண்டு வெளிக்காட்டி இருக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம், காரப்பட்டு என்கிற பகுதியில் இயங்கி வரும் வி.வி.மு அமைப்பின் ஆதரவாளரான தோழர்.ராஜேந்திரன்-ஐ திட்டமிட்டு படுகொலை செய்து கொலை வெறியாட்டம் போட்டிருக்கிறார்கள். இன்னும் பல தோழர்களை கடுமையாக தாக்கி கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள். நேருக்குநேர் நின்று வார்த்தை வாதம் செய்ய வக்கில்லாத, துப்பில்லாத இந்த போலி கம்யூனிஸ்டுகள்(CPM) எதிர்பாராத சமயத்தில் ஒரு கூலிப்படையாகவே மாறி திட்டமிட்டு தோழர்களை தாக்கி கொலைவெறியாட்டம் போட்டு தங்களின் குணம், கொள்கை, எண்ணம் அனைத்தையும் மிகதெளிவாக காட்டியிருக்கிறார்கள். அடிமுட்டாளும் செய்யமறுக்கும் செயலை கூசாமல் செய்த இந்த போலி கம்யூனிஸ்டுகளுக்கு தக்க பதிலடி கொடுத்து அவர்களின் முகத்திரையை மக்கள் மத்தியில் கிழிக்க வேண்டும். மக்களும் தங்களை சூழ்ந்திருக்கும் சூது எது என்பதறிந்து தங்களவர்களிடம் அறிவுருத்துவது சமுதாய கடமையாகும், போலிகளை இனங்கண்டு வேரோடு அழிக்க விரைவாக வாருங்கள் தோழர்களே.


References....
http://newscap.wordpress.com/2008/05/12/cpm2/
http://poar-parai.blogspot.com/2007/11/cpm-cpi.html