மின் கட்டண உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட பந்த்தில் வன்முறை வெடித்தது. பேருந்து, தொடர்வண்டிகள் மறிக்கப்பட்டதோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
63 ஆண்டுகளாகும் சுதந்திர இந்தியா என்று சொல்லப்படும் போலி ஜனநாயக நாட்டில் நாடாளுமன்ற முறையிலேயே மக்களை வென்று புர்ரட்சி செய்து சோவியத்தை அமைப்போம் எனும் போலி கம்யூனிஸ்டுகள் தாங்கள் பல ஆண்டுகளாய் ஆளும் மேற்குவங்கம், திரிபுரா, கேரளத்தில் எந்த இலட்சனத்தில் ஆட்சி செய்கின்றனர், மக்களைத் திரட்டினர் என்பதெல்லாம் உலகறிய வெட்ட வெளிச்சமாகிறது. கம்யூனிஸ்ட் பேரில் உள்ள போலிகள் மத்தியில் காங்கிரசுக்கும், மாநிலத்தில் திராவிட கட்சிகளுக்கும் கூஜா தூக்கி, அவர்கள் காலை நக்கி, அந்தந்த கட்சிகளின் துணை அலுவலகம் போலவே செயல்படுவதோடு சொந்த நிலைப்பாடு ஏதுமின்றி பிழைப்பு நடத்துகின்றனர். சமீபத்தில் நடந்த தேர்தல் முடிவுகளே அதற்கு நல்ல உதாரணம். அதோடு விவசாயி, தொழிலாளிக்கு ஆதரவாய் இருப்பதாய் தன்னைக் காட்டிக் கொண்டு இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான மக்களை சங்கம் எனும் பேரில் ஒன்றுசேர்த்து அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து, அடிப்படை உரிமையும், உலக அறிவையும் பெறாவண்ணம் காயடித்ததோடு, சிங்கூர், நந்திகிராமில் விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாய் பிடுங்கி முதலாளிகளுக்கு தன் விசுவாசம் காட்டமுனைந்தபோது மக்களின் எதிர்ப்புக்கு உள்ளானதும், எந்த அடிப்படை வசதிகளும் இன்றி வாழும் லால்கரில் மக்கள் போராடியதும் திட்டமிட்டே மறைக்கப் படுவதோடு அரசு மற்றும் முதலாளித்துவ ஊடகங்களால் மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டும் போராட்டங்கள் திரித்துக் கூறப்பட்டன. முதலாளித்துவ ஊடகங்களின் செய்திகளே அதிகாரப்பூர்வ செய்தி தளங்களாகி வருவதால் பெரும்பான்மை மக்களும் இந்த கருத்துக்கு ஆட்பட்டு வருகின்றனர்.
நாட்டின் சுயசார்புத்தன்மை எந்தத்துறையிலும் வந்துவிடா வண்ணம் அரசு முழுக்கவும் அமெரிக்க கைக்கூலியான பிறகு கல்வி, விவசாயம், தொழில்வளம், மருத்துவம் என அனைத்து துறைகளும் அரசு தன்னை கை கழுவிக் கொண்டு தனியார் மயமாகி மக்களிடம் இருந்து அந்நியப் பட்டுப் போவதோடு எண்ணிலடங்கா துயரத்தையும் மக்கள் நாளும் அனுபவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியே உற்பத்தி குறைவு, ஊக வணிகம், விலைவாசி உயர்வும். இந்த பிரச்சனை நாட்டின் அனைத்து பகுதிகளை

ஆனால் இந்த யோக்கிய சிகாமனிகள் மகாராஷ்டிராவில் நடத்திய கடந்த ஆட்சியில் மின் துறையை தனியார் மயமாக்கி அமெரிக்காவின் என்ரான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக